சிபிஐ விசாரணை முடிந்து உற்சாகமாக சிரித்த முகத்தோடு வந்த விஜய்.. உடனே சென்னைக்கு ரிட்டர்ன்!
டெல்லி: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணையை முடித்துக் கொண்டு சிரித்த முகத்துடன் வெளியே வந்தார் விஜய். கருப்பு நிற உடையில் காாின் Sunroof வழியாக நின்று கொண்டு தொண்டா்கள், ரசிகா்களை பாா்த்து கையசைத்தார். தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்ட நிலையில்,இன்றைய தினமே தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்ட விஜய், தற்போது சென்னை வந்தடைந்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்யிடம் இன்று நடைபெற்ற சிபிஐ விசாரணை நிறைவடைந்துள்ளது. நாளையும் விஜய்யிடம் விசாரணை நடைபெறும் என முன்பு தகவல்கள் வெளியான நிலையில், நாளை விசாரணை இல்லை எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து இன்றே சென்னை வந்தடைந்துள்ளார் விஜய்.

தமிழ்நாடு, மேற்கு வங்கம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் டெல்லியில் இன்று அறிவித்தார். தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி என்று தேர்தல் நடைபெறும் என்றும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் மார்ச் 30 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில், இன்று (மார்ச் 15 ஆம் தேதி) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யிடம், டெல்லியில் சிபிஐ மூன்றாம் கட்ட விசாரணையை மேற்கொண்டது. சிபிஐ விசாரணைக்காக ஆஜராவதற்கு நேற்று (மார்ச் 14 ஆம் தேதி) சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டிருந்தார் விஜய். அவருடன் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் 7 பேர் சென்றனர். டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கிய விஜய், இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை ஹோட்டலில் இருந்து புறப்பட்டு, சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.
ஏற்கனவே 2 முறை நடத்தப்பட்ட விசாரணையின்போது கோரப்பட்ட ஆவணங்கள் இந்த விசாரணையின்போது, விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். காலை 10.30 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை மாலை 5.30 மணி வரை நடைபெற்றது. விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகள் விஜய்யிடம் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது இந்த 3 ஆம் கட்ட சிபிஐ விசாரணை நிறைவடைந்து உள்ளது. தேவைப்பட்டால் விசாரணை நாளை(திங்கட்கிழமை) மதியம் வரை நீடிக்கலாம் என்று தகவல்கள் வெளியான நிலையில், நாளை விஜய்யிடம் விசாரணை இல்லை என சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிபிஐ விசாரணை நடைபெற்ற அலுவலகத்தின் முன்பு தவெக தொண்டர்கள் கூடியிருந்தனர். தவெக தொண்டர்கள் டிவிகே, டிவிகே என்று முழக்கம் எழுப்பினர். இந்நிலையில், இன்று சிபிஐ அலுவலகத்தில் 7 மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு, அங்கு வெளியில் கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தபடி சென்றுள்ளார் விஜய். விஜய், சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வரும்போதே காாின் Sunroof வழியாக நின்று கொண்டு தொண்டா்கள், ரசிகா்களை பாா்த்து கையசைத்தார்.
இதையடுத்து இன்றைய தினமே தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்ட விஜய், தற்போது சென்னை வந்தடைந்துள்ளார். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய், சிபிஐ விசாரணை முடிந்து சென்னை வந்துள்ளார்.
-
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ












Click it and Unblock the Notifications