'ஓவியா... உன்னை திருமணம் செய்ய ரெடி!' சிம்புவா இப்படிச் சொன்னார்?
ஓவியாவை திருமணம் செய்ய ரெடி என்று நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துவிட்டு பின்னர் அந்த பதிவை அழித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பயங்கர பிரபலமான ஓவியாவை தான் திருமணம் செய்து கொள்ள ரெடி என்று சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாக ஊரெல்லாம் ஒரே பேச்சாக உள்ளது. ஆனால் அவர் அவ்வாறு கூறியிருப்பாரா என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.
விஜய்டிவியில் பிரபலமாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் மற்ற சேனல்களின் மெகா சீரியல்கள் அடி வாங்குகின்றன என்றால் அது மிகையாகாது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட் ஏறியதற்கு ஓவியாவும் ஒரு காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

நல்ல பெண்
ஆளுக்கு தகுந்தாற்போல் பச்சோந்தி வேடமிட்டு வரும் ஜூலியின் முகத்திரையை மக்களுக்கு கிழித்து காட்டிய பெரும் பங்கு ஓவியாவையே சாரும். ஓவியாவின் நேர்மை, கள்ளம் கபடமில்லாத குணம் ஆகியவற்றால் தமிழக மக்களின் மனங்களை களவாடிவிட்டார் என்றே சொல்லலாம்.

சில நாள்களாக சோதனை
3 அல்லது 4 வாரங்களாக தொடர்ந்து சக போட்டியாளர்களால் ஓவியா எலிமினேட் செய்யப்பட்டாலும் அவரை பிக்பாஸ் வீட்டில் தக்கவைத்து கொள்ள மக்களும், ஓவியா ரசிகர்களும் அசராமல் வாக்களித்து வருகின்றனர். இது மற்ற போட்டியாளர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது.

சீண்டிய போட்டியாளர்கள்
ஆரவ் ஓவியாவை காதலிப்பதாக கூறி ஏமாற்றி விட்டால் ஓவியா மன உளைச்சலில் உள்ளதாகவும் சக போட்டியாளர்கள் ஓவியாவின் நற்பெயரை கெடுக்க பல்வேறு யுத்தியை கையாண்டு வருவதாகவும் தெரிகிறது. இதனால் ஓவியாவை எரிச்சலூட்டும் செயல்களை காயத்ரி, சக்தி, ஜூலி ஆகியோர் செய்து வருகின்றனர். இதனால் கடந்த 2 நாள்களாக ஓவியா தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று போராடி வருகிறார்.

ரசிகர்கள், சக நடிகைகள்
பிக்பாஸ் வீட்டுக்குள் நடைபெறும் அனைத்து தில்லு முல்லுகளையும் தெரிந்து கொண்ட ஓவியா ரசிகர்களும், சக நடிகைகளும் ஓவியாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு நடிகர் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே சென்றுவிட்டார் என்றால் அது மிகையாகாது. அவர் வேறுயாருமல்ல சிம்பு என்கிற சிலம்பரசன்தான்.

டுவிட்டரில் சிம்பு
கடந்த சில நாள்களாக டுவிட்டரில் ஓவியாவுக்கு ஆதரவாக சிம்பு கருத்து தெரிவித்து வருகிறார். நேற்று அவர் தனது டுவிட்டரில் ஓவியா உன்னை திருமணம் செய்ய ரெடி, தைரியமான பெண், உங்களுக்கு கடவுளின் ஆசிகள் என்று அவர் பதிவிட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் எந்த காரணத்துக்காகவோ தனது பதிவை அவர் நீக்கிவிட்டார். இதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. இல்லை யாராவது அவரது கணக்கை ஹேக் செய்து இதுபோல் பதிவிட்டனரா என்பதும் புரியாத புதிராகவே உள்ளது. சிம்பு நிஜமாகவே டுவீட் செய்திருப்பாரா என்பது குறித்து அவர் விளக்கினால் மட்டுமே பதில் கிடைக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications