சுவாதி கொலையாளி சென்னை திருவான்மியூரில் கைதா?.. பரபரப்பு
சென்னை: சென்னை திருவான்மியூரில் வைத்து சுவாதி கொலையாளியை போலீஸார் கைது செய்துள்ளதாக நேற்று இரவுக்கு மேல் ஒரு பரபரப்பு கிளம்பியது. ஆனால் இதை போலீஸார் மறுத்துள்ளனர். அதேசமயம், கொலையாளி குறித்த முக்கிய விவரத்தை இன்று பிற்பகலுக்குள் போலீஸார் வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
இளம் பெண் சுவாதி, சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்ற நபர் துணிகரமாக தப்பிச் சென்று விட்டார். அவர் யார், எந்தப் பகுதியைச் சேர்ந்தவர், ஏன் கொலை செய்தார் என்ற விவரம் தெரியவில்லை.

இந்த வழக்கை தற்போது நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்ட மாநகர போலீஸ் ஆணையர் டி.கே.ராஜேந்திரனின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொலையாளியை திருவான்மியூர் பகுதியில் வைத்து நேற்று போலீஸார் கைது செய்து விட்டதாக திடீரென ஒரு தகவல் பரவியது. திருவான்மியூரைச் சேர்ந்த ஒரு தரப்பினர் இந்தத் தகவலைத் தெரிவித்தனர். தங்களது பகுதியைச் சேர்ந்த ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளதாக அவர்கள் கூறினர்.
ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை என்று போலீஸ் தரப்பில் மறுத்துள்ளனர். அதேசமயம், கொலையாளியை நெருங்கி விட்டதாகவும், விரைவில் அவன் பிடிபடுவான் என்றும் போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே இன்று பிற்பகலுக்குள் கொலையாளி கைது குறித்த விவரம் வெளியாகலாம் என்ற புதிய தகவலும் வெளியாகியுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications