தெளிவான வானம்... பிஎஸ்எல்வி ராக்கெட் சென்றதை செல்போனில் "கிளிக்"கிய சென்னை மக்கள்!
சென்னை: மேகமூட்டம் இல்லாமல் வானம் தெளிவாக காணப்பட்டதால், இஸ்ரோ ஏவிய பி.எஸ்.எல்.வி. சி-29 ராக்கெட் வானில் சீறிப்பாய்ந்த காட்சியை சென்னை மக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும், அதன் வணிகக் கிளையுமான ‘ஆண்டிரிக்ஸ்' நிறுவனமும் இணைந்து, சிங்கப்பூரைச் சேர்ந்த சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் செயற்கை கோள்களை வணிக ரீதியில் விண்ணில் செலுத்துவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்படி 625 கிலோ எடை கொண்ட டெலஸ்-1, வெலக்ஸ்-சி1, வெலக்ஸ்-2, அதனாக்சாட்-1, கென்ட் ரிட்ஜ்-1, கிளாசியா ஆகிய 6 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள்கள், பி.எஸ்.எல்.சி. சி-29 ராக்கெட் மூலம் நேற்று மாலை விண்ணில் செலுத்தப்பட்டன.

.
அப்போது வானம் மேகமூட்டம் இல்லாமல் தெளிவாக காணப்பட்டதால் ராக்கெட் வானில் சீறிப்பாயும் காட்சி சென்னை நகரின் பெரும்பாலான இடங்களில் நன்றாக தெரிந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த மக்கள் மொட்டை மாடிகளில் நின்றபடி ராக்கெட்டை ஆர்வத்துடன் ரசித்துப் பார்த்தனர்.
சிலர் தங்களது செல்போனிலும் இந்த நிகழ்வைப் படம் பிடித்தனர். ராக்கெட் சென்ற பாதையின் புகைமூட்டம் வானில் கலைவதற்கு சிறிது நேரம் ஆனது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications