சேகர் ரெட்டியின் நண்பர் ரத்னம் வீட்டில் 10 மணி நேரம் ஐடி ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் சிக்கின
சேகர் ரெட்டி நண்பர் ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில் 10 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டு இன்று மாலையளவில் சோதனை முடிவுக்கு வந்தது. இந்த ரெய்டில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
சென்னை: போயஸ் கார்டனுக்கு நெருக்கமான சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ராமச்சந்திரன் மற்றும் ரத்தினம் ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தியது.
தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு அலுவலகங்களில் சோதனை நடத்திய ஐடி அதிகாரிகள், சட்டத்திற்கு புறம்பாக குவிக்கப்பட்ட பணம், நகைகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் தமிழகத்தில் பல இடங்களில் மணல் குவாரி நடத்தி வருகிறார். அரசு பணிகள் பலவும் இவருக்கு கிடைத்துள்ளது.

அந்த வகையில், புதுக்கோட்டையை சேர்ந்த மணல் வியாபாரி ராமச்சந்திரன் மற்றும், திண்டுக்கல்லை சேர்ந்த மணல் வியாபாரி ரத்தினம் ஆகியோர் சேகர் ரெட்டிக்கு பழக்கமாகியுள்ளனர். அவர்களுக்கும் முறைகேட்டில் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. இதையடுத்து, அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ராமச்சந்திரன் மற்றும் ரத்தினம் ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில் 10 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டு இன்று மாலையளவில் சோதனை முடிவுக்கு வந்தது. இந்த ரெய்டில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.
இது சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான வழக்கில் மேலும் இறுக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications