For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறந்த மாற்றம் வேண்டும் என விரும்பும் மக்களுக்கு இது வெறுப்பாக இருக்கும்.. சொல்கிறார் கமல்!

ஒரு ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவது ஏற்க முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஒரு ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவது ஏற்க முடியாது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

இரண்டு நீதிபதிகளும் இருவேறு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதனால் நீதிபதிகள் தகுதி நீக்க வழக்கு மூன்றாவது நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

It is frustrating for people who want a change for the better: Kamal

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவதை ஏற்க முடியாது.

உண்மையில் டெல்லி மற்றும் தமிழகம், புதுச்சேரியில் நடப்பதில் வித்தியாசம் ஒன்றும் இல்லை. சிறந்த ஒரு மாற்றம் வேண்டும் என விரும்பும் மக்களுக்கு இது வெறுப்பாக இருக்கிறது. இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டியுள்ளார்.

English summary
Kamal has tweeted that Interference in the functioning of an elected government is unacceptable in a democracy. It is frustrating for people who want a change for the better Kamal said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X