விவேக் முன்னிலையில் சசிகலா அறையில் ஐடி அதிகாரிகள் சோதனை! பென் டிரைவ் சிக்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை: போயஸ் கார்டனில் சசிகலா தங்கியிருந்த அறையில் ஐடி அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதையடுத்து ஜெயலலிதா தங்கியிருந்த அறையிலும் ரெய்டு நடத்த ஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
ஐடி துறை அதிகாரிகள் சுமார் 10 பேர் இந்த சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக் முன்னிலையில் சோதனைகள் நடைபெறுகின்றன. 10 வருடங்களாக சசிகலா இந்த அறையில்தான் தங்கியிருந்தார். இந்த அறையில் இருந்து பென் டிரைவ், லேப்டாப்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்ததாக ஜெயலலிதா தங்கியுள்ள அறையில் ரெய்டு நடைபெறும் வாய்ப்புள்ளதாக ஐடி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போயஸ் இல்லத்தில் சல்லடையாக சோதனை நடப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications