உதவியாளர் "ஜெகஜ்ஜால" ஜனா வீட்டிலும் ரெய்டு... செய்தியாளர்களிடம் ரொம்பவே பதறிய தினகரன்

தம்முடைய உதவியாளர் ஜனா வீட்டிலும் ரெய்டு நடத்துகிறார்களே என செய்தியாளர்களிடம் ரொம்பவே பதறிப் போனார் தினகரன்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஐடி ரெய்டு, டிடிவி தினகரன் என்ன சொல்கிறார்?- வீடியோ

    சென்னை: தம்முடைய உதவியாளர் ஜனா வீட்டிலும் கூட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றிருக்கிறார்களே என ரொம்பவே பதறிப் போனார் தினகரன். இப்படி உதறலோடு கரிசனம் காட்டும் ஜனா என்கிற பொறியை வைத்துதான் இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சிக்க வைக்கப்பட்டார் தினகரன்.

    ஜெயா டிவியில் எம்.டி.யாக இருப்பவர்களுக்கு பி.ஏ.வாக இருந்தவர் ஜனா. பின்னர் மெல்ல மெல்ல சசிகலா குடும்பத்துடன் மிகவும் நெருக்கமானவராக மாறினார்.

    தினகரன் குடும்பத்தில் ஐக்கியம்

    தினகரன் குடும்பத்தில் ஐக்கியம்

    குறிப்பாக தினகரன் குடும்பத்தில் ஐக்கியமாகிவிட்டார் ஜனா. அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜனா மூலமே நிறைய ‘காரியங்களும்' சாதித்து கொள்ளப்பட்டன.

    சிக்கிய ஜனா

    சிக்கிய ஜனா

    இதனால் சாலிகிராமம் பக்கம் ஜனா பெயரை கேட்டாலே பிரபலங்கல் ரொம்பவே ஆடிப் போய்விடுவார்கள். இந்த ஜனாவை வைத்துதான் இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் சிறைக்குப் போகவும் நேரிட்டது.

    ஐடி ரெய்டால் ஆடிய தினகரன்

    ஐடி ரெய்டால் ஆடிய தினகரன்

    அப்போது ஜனாவிடம் தினகரனின் 3 பாஸ்வேர்டுகள் இருந்ததாகவும் அவற்றை மட்டும் சொல்லாமல் இருந்தால் போதும் என தினகரன் புலம்பியதாகாவும் தகவல்கள் வெளியாகின. இப்படி தமது குடும்பத்தில் ஒருவராக ரொம்பவே நெருக்கமாக இருந்த ஜனா வீட்டுக்குள்ளும் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்துவிட்டதால் ரொம்பவே பதறிப் போனார் தினகரன்.

    எதுக்காக பதற்றம்

    எதுக்காக பதற்றம்

    சென்னை அடையாறு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஜனா வீட்டுக்கெல்லாம் ரெய்டு போயிருக்காங்களே.. என ரொம்பத்தான் பதறிப் போய் புலம்பினார். இதைப் பார்த்த மூத்த பத்திரிகையாளர்கள் சிலர் நமட்டுச் சிரிப்பையும் வெளிப்படுத்தினர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+