5வது நாள்.. ஆஃப் ஆகாத ஐடி! கோவை செந்தில் பாலாஜி நண்பர் அலுவலகத்தில் இரவு பகலாக நடக்கும் ரெய்டு
கோவை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் செந்தில் கார்த்திகேயனின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை 5 வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கரூர், சென்னை, கோவை, ஐதராபாத் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை தொடர்ந்து நடைபெற்றன.

கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டிற்குள்ளும் ஐடி அதிகாரிகள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். செந்தில் பாலாஜியின் நண்பர்கள், திமுக நிர்வாகிகள், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறையின் சோதனையிட தொடங்கினர்.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 22 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜியின் பூர்வீக வீடு இருக்கும் மண்மங்கலம் பகுதியிலும் பல இடங்களில் சோதனை நடைபெற்றது.
குறிப்பாக கோவையில் செந்தில் பாலாஜியின் நண்பர் செந்தில் கார்த்திகேயனின் வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொள்ள தொடங்கினர். கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் அமைந்து இருக்கும் செந்தில் கார்த்திகேயன் வீடு, அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட தொடங்கினார்கள்.
வெள்ளிக்கிழமை தொடங்கிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை பல இடங்களில் நிறைவடைந்துவிட்ட நிலையில், இன்றும் பல இடங்களில் 5 வது நாளாக சோதனை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் செந்தில் கார்த்திகேயனின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை இன்னும் நிறைவடையவில்லை. 5 வது நாளாக இன்றும் ஐடி அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

எஸ்பி வேலுமணியின் வலதுகரம் என்று கூறப்பட்ட செந்தில் கார்த்திகேயன், அதிமுகவில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன் திமுகவில் இணைந்து செந்தில் பாலாஜியின் நம்பிக்கைக்குரியவராக மாறினார் செந்தில் கார்த்திகேயன். எம்ஜிஆர் இளைஞரணி கோவை வடக்கு மாவட்ட செயலாளராக இருந்து வந்த அவர், நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் நம்பிக்கையாக திகழ்ந்தார் என்று கூறப்படுகிறது.
அதிமுக வெற்றிபெற்றால் கோவை மேயராக செந்தில் கார்த்திகேயன் மனைவி கிருபாலினி அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தேர்தலில் அதிக இடங்களை திமுக வென்றது. கிருபாலினியும் தேர்தலில் தோல்வியடைந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் செந்தில் கார்த்திகேயன் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications