சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடுகள், அலுவலகங்களில் ரெய்டு.. ரொக்கம் பறிமுதல்!
மதுரை: பிரபலமான சினிமா பைனான்சியர் மதுரை அன்புச்செழியன் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அவரது வீட்டிலிருந்து கணக்கில் வராத ஏராளமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது.
தமிழ் சினிமா உலகில் எத்தனையோ பைனான்சியர்கள் இருந்தாலும், அதிரடி பைனான்சியர் என்ற பெயரைப் பெற்றவர் மதுரை அன்பு எனப்படும் அன்புச் செழியன்.

மதுரையில் சாதாரண பைனான்சியராக இருந்தவர், தொன்னூறுகளின் இறுதியில் திடீரென சினிமா பைனான்சியராக உருவெடுத்தார்.
கொடுத்த கடனை வசூலிக்க அன்புச் செழியன் பின்பற்றிய வழிமுறையே அலாதி. அதனை நடிகைகள் ரம்பா, தேவயானி போன்றவர்களைக் கேட்டால் கதைகதையாகச் சொல்வார்கள். கடன் பெற்றவர்களின் சொத்துக்களைக் கைப்பற்றிக் கொள்வது அல்லது சம்பந்தப்பட்டவர்களையே சிறைப்பிடிப்பது இவர் பாணி என்பார்கள்.
இயக்குனர் ஜி.வி.வெங்கடேஸ்வரன் தற்கொலை வழக்கில் பரபரப்பாக பேசப்பட்டவர் அன்புசெழியன். இவர் அழகிரி, சசிகலா உள்ளிட்டோருக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் திரையுலகில் கூறுவார்கள்.
அழகிரி மகன் துரைதயாநிதி தயாரிப்பு மூலம் வெளிவந்த தூங்காநகரம், உள்ளிட்ட பல படங்கள் வெளிவர அன்புவின் பைனான்ஸ்தான் முக்கிய காரணம்.
பின்னர் ஒரு விநியோகஸ்தராக உருவெடுத்த அன்பு, இப்போது கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் தனி தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் வெளியான வெள்ளக்காரத் துரை இவரது தயாரிப்புதான்.
இப்போது தயாராகிவரும் சில படங்களுக்கு இவர்தான் பைனான்சியர். சொந்தப் படமும் எடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் வருமான வரித்துறையினர் இன்று அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையின் போது கணக்கில் வராத பணமும், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications