விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் இன்று 2வது நாளாக ஐ.டி. ரெய்டு: புலி படக்குழு வீடுகளிலும்..
சென்னை: நடிகர் விஜய், புலி படக்குழுவினர், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தியுள்ளனர்.
விஜய் நடித்துள்ள புலி படம் கணக்கில் காட்டப்படாத பணத்தில் எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் புதன்கிழமை சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீடு, விருகம்பாக்கத்தில் உள்ள அவரது அலுவலகம், புலி படக்குழுவினரின் வீடுகள், அலுவலகங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையால் கோடம்பாக்கம் பரபரத்தது.

விஜய்
விஜய்யின் வீட்டில் காலை 7 மணியில் இருந்து இரவு வரை சோதனை நடந்தது. இந்நிலையில் விஜய்யின் வீடு, புலி படக்குழுவினரின் வீடுகள், அலுவலகங்களில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளார்கள்.

நயன்தாரா
விஜய்யின் வீட்டில் சோதனை நடந்தபோது நடிகை நயன்தாராவின் வீட்டிலும் சோதனை நடந்தது. கேரள மாநிலம் கொச்சி, திருவல்லாவில் உள்ள அவரது வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர். இந்நிலையில் அவர்கள் இன்றும் நயன்தாராவின் வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

சமந்தா
நடிகை சமந்தாவின் சென்னை மற்றும் ஹைதராபாத் வீடுகளில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை சோதனை நடத்தினர். இந்நிலையில் இன்றும் அவரது வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

ஆவணங்கள்
நேற்றைய சோதனைகளின் போது சிக்கிய ஆவணங்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டுள்ளதாம். 150 அதிகாரிகள் இந்த சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications