For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிகரிக்கும் நெருக்கடி... தொடரும் ஐடி ரெய்டு : வீடியோ

முன்னாள் அமைச்சர் செந்தில் பாஜாஜியின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நான்காவது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

கரூர்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து நான்காவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் செந்தி பாலாஜி ஆரம்பத்தில் இருந்தே எடப்பாடி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தி வந்தார். கரூரில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுவதில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரும் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் வேண்டும் என்றே தாமதம் செய்து வருகின்றனர் என பகிரங்கமாகக் குற்றம்சாட்டி வந்தார்.

IT Raid Continues in Ex. Minister Senthil Balaji's Places

இந்தநிலையில், தினகரனுக்கு தனது ஆதரவுக் கரத்தை நீட்டிய காரணத்தால் 18 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். இதில் செந்தில் பாலாஜியும் ஒருவர்.

இந்த நிலையில் தான், தற்போது செந்தில் பாலாஜியின் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 4ஆவது நாளாக அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டதில் அவர் 100 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவருடைய நண்பர் சரவணனின் நிதி நிறுவனம் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
In Ex. Minister Senthil Balaji's friends and relatives places IT department officials doing search and many more important documents seized.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X