பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தில் வருமானவரித்துறையினர் சோதனை
பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் ஐ டி சோதனை | Oneindia Tamil
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமம் செயல்பட்டு வருகிறது. பெரம்பலூர் மட்டுமின்றி சமயபுரம், மாமல்லபுரம், சென்னை என பல இடங்களிலும் கல்வி நிறுவனங்கள் இந்த குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று காலை திடீரென வருமான வரித்துறையினர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்திற்கு சொந்தமான 26 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூரில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் சமயபுரம், மாமல்லபுரம், சென்னை ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளிலும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications