ஆட்சியை விடுங்க.., அதிமுக கட்சி கூட ஜெ. வீட்டில் நடந்த ஐடி ரெய்டுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லையே
Recommended Video

சென்னை: அதிமுகவின் 'நிரந்தர' பொதுச்செயலாளர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் கார்டனில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தபோதிலும், அதிமுக சார்பில் இதுவரை கண்டன அறிக்கை கூட வரவில்லை என்பது அக்கட்சி தொண்டர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
ஜெயலலிதாவின் இல்லத்தில் நள்ளிரவு நடந்த ஐடி ரெய்டுகளால் தொண்டர்கள் கடும் கோபத்திலும், அதிருப்தியிலும் உள்ளனர். அதிமுக அரசு ஆட்சி செய்யும் நிலையில், காவல்துறை உதவியோடு ஐடி ரெய்டு நடந்ததை பார்த்து அதிமுக தொண்டர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, துணை முதல்வர் பன்னீர்செல்வமோ அல்லது அமைச்சர்களோ கூட இந்த ரெய்டை கண்டிக்கவில்லை.

ஜெயலலிதாவுக்கு இழுக்கு
போயஸ் இல்லம் என்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கோயிலாக மதிக்கப்படும் இடம். அங்கு முறைகேடு ஆவணங்கள் இருப்பதாக நினைத்து நடந்த ஐடி சோதனை ஜெயலலிதாவுக்கு இழுக்கு என்று அதிமுக தொண்டர்கள் நினைக்கிறார்கள்.

கண்டனம், ஆதங்கம் இல்லை
இதுவரை தமிழக அரசு இந்த சோதனை குறித்து கண்டனமோ குறைந்தபட்சம் ஆதங்கமோ கூட வெளிப்படுத்தவில்லை. அது ஒருபுறம் என்றால், அதிமுக கட்சி சார்பிலும் கண்டனம் வெளியாகவில்லை.

கண்டன அறிக்கை கூடஇல்லையாம்
ஆட்சியும், கட்சியும் ஒரே இடத்தில் இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் ஆட்சியாளர்கள் பொதுவானவர்கள். கட்சி என்பது அப்படியில்லை. எனவே குறைந்தபட்சம் அதிமுக கட்சி சார்பில் கண்டன அறிக்கையை வெளியிட்டிருக்கலாம். ஆனால் அதை செய்யவில்லை.

தொண்டர்கள் கோபம்
அதிமுக அம்மா பிரிவு சார்பில் டிடிவி தினகரன் நேற்றும் இன்றும் ரெய்டுகளை கண்டித்து சரமாரியாக பேட்டியளித்து வருகிறார். ஆனால், அதிமுக புரட்சி தலைவி அம்மா பிரிவை சேர்ந்த எடப்பாடி, ஓ.பி.எஸ் உட்பட எந்த பிரமுகரும் வாய் திறக்கவில்லை. இத்தனைக்கும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என பொதுக்குழுவை கூட்டி அறிவித்துக்கொண்டவர்களும் இவர்களே.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications