+2: முதலிடம் பெற்ற ஊத்தங்கரை பள்ளி.. தேர்தல் ரெய்டில் ரூ.3.40 கோடி, தங்க நாணயங்கள் பதுக்கி சிக்கியது
சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்று வெளியான பிளஸ்டூ தேர்வு முடிவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இப்பள்ளியின் ஆர்த்தி மற்றும் மாணவன் ஜஸ்வந்த் ஆகியோர் 1,200 மதிப்பெண்களுக்கு தலா 1,195 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.
ஆனால் இந்தப் பள்ளி கடந்த ஏப்ரல் மாதம் பெரும் சர்ச்சையில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 25ம் தேதி இந்தப் பள்ளியில் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கோடிக்கணக்கில் பணமும், தங்க நாணயங்களும் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்தப் பள்ளியில், தேர்தலின்போது வாக்காளர்களுக்கு வழங்க பணம், நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் 25ம் தேதி காலை ஊத்தங்கரை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயகுமாரி, டிஎஸ்பி பாஸ்கரன், வட்டாட்சியர் அமுதன் ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பள்ளி அலுவலகத்தில் ரூ.3,40,45,000 ரொக்கம், தலா ஒரு கிராம் எடையுள்ள 245 தங்க நாணயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளி நிர்வாகத்துக்குச் சொந்தமான கல்லூரியிலும், தாளாளர் சந்திரசேகரன் அறையிலும் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
கிருஷ்ணகிரி, ஓசூரில் இருந்து 2 வாகனங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் வந்து, பள்ளியின் தாளாளர் சந்திரசேகரனிடம் விசாரணை நடத்தினர்.
இந்த சோதனை குறித்து பின்னர் பள்ளி நிர்வாகம் சார்பில் கூறுகையில், பள்ளி, கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 2 மாதம் சம்பளம் வழங்குவதற்காக பணம் வைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் நன்றாக பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தங்க நாணயங்கள் வழங்க வைத்திருந்தோம். பள்ளியின் வளர்ச்சி பிடிக்காத சிலர் தேவையற்ற வதந்திகளை பரப்பி உள்ளனர். பணம், நகைகளுக்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று விளக்கினர்.
இந்தப் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த இரு மாணவ, மாணவியர்தான் தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications