விடிய விடிய தொடரும் சோதனை.. ராம மோகன ராவ் உதவியாளர்களிடம் தீவிர விசாரணை
சென்னை தலைமை செயலகத்தில் ராம மோகன ராவ் அறையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை முடிந்தது.
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் ராம மோகன ராவ் அறையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை முடிந்தது. இதையடுத்து அவரது உதவியாளர்கள் இருவரை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்
தலைமை செயலகத்தில் தலைமை செயலர் ராம மோகன ராவின் அறையில் நேற்று மதியம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதியம் 2.20 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு 7.30க்கு நிறைவு பெற்றதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனை நிறைவு பெற்றது. ராம மோகன ராவின் கணிணியில் இருந்த தகவல்கள் மற்றும் அறையிலிருந்து சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போது தனிச்செயலாளர் அறையில் இருந்த கம்ப்யூட்டர் சி.பி.யூ.வை வருமான வரித்துறையினர் எடுத்துச் சென்றனர். ஹார்ட் டிஸ்க்கில் உள்ள தகவல்களை பதிவிறக்கம் செய்தனர். சோதனையின் போது கோப்புகள், சி.டி.க்கள், ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
மேலும், ராம மோகன ராவின் நேர்முக உதவியாளர்கள் சேகர், குமார் ஆகிய இருவரையும் விசாரணைக்காக வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே அண்ணாநகரில் உள்ள ராம மோகன ராவ்வின் வீட்டிலும், திருவான்மியூரில் உள்ள அவரது மகன் விவேக் வீட்டிலும் தொடர்ந்து 19 மணி நேரமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் இன்று வெளியாகும் என தெரிகிறது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications