கருணாநிதி இயல்பிலேயே போர் குணம் கொண்டவர்.. மீண்டு வருவார்.. வைரமுத்து உருக்கம்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கவிஞர் வைரமுத்து பேட்டியளித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கவிஞர் வைரமுத்து பேட்டியளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு இரண்டாவது நாளாக காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு சிறுநீரக நோய் தொற்று மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டது.

கருணாநிதி மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார். வரிசையாக அரசியல் தலைவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து வைரமுத்து பேட்டியளித்துள்ளார்.
கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். கருணாநிதியின் மரபணுக்களிலேயே போர்க்குணம் கலந்துள்ளது.
மக்களுக்காக பல போராட்டங்களை கண்டவர் கருணாநிதி. இன்று நோய்க்கு எதிராக போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். இந்த போராட்டத்திலும் அவர் வெல்வார். கண்டிப்பாக அவர் மீண்டு வருவார் என்றுள்ளார்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications