"அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும்.." வந்து விழுந்த கேள்வி? சசிகலா பதில் இதுதான்
நாகை: மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது. மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசும் இடம் சட்டசபை. எனவே, மக்கள் பிரச்சினைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள் தாராளமாக பேசலாம் என்று சசிகலா கூறினார்.
திருவாரூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சசிகலா நாகை வருகை தந்தார்.
வேளாங்கண்ணியில் உள்ள சொகுசு விடுதியில் தனது உறவினர்களோடு தங்கி இருந்த சசிகலா, மாலையில் திருவாரூருக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தாராளமாக பேசலாம்
அப்போது அவர் கூறியதாவது:- மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு உரிமை உள்ளது. மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசும் இடம் சட்ட சபை. எனவே, மக்கள் பிரச்சினைகள் குறித்து மக்கள் பிரதிநிதிகளான எம்எல்ஏக்கள் தாராளமாக பேசலாம். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பேசுவதற்கு உரிமை இருக்கிறது" என்றார்.

யார் கைக்கு சென்றால்
அப்போது சசிகலாவிடம் அதிமுக யார் கைக்கு சென்றால் நன்றாக இருக்கும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சசிகலா, "அதிமுக தொண்டர்களிடம் தான் இதை கேட்க வேண்டும்" என்றார். சட்டமன்றத்தில் அதிமுக சார்பாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை வரவேற்பதாக ஓ பன்னீர்செல்வம் பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டது.

ஓபிஎஸ் சந்திக்க வாய்ப்பு இருக்கிறதா
இந்த நிலையில், வேளாங்கண்ணியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சசிகலாவை சந்தித்தனர். சட்டசபையில் ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி மோதல் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் திமுகவிற்கு சாதகமான சூழ்நிலையாக அமையாது. அப்படி ஏற்படும் அளவிற்கு நான் விடமாட்டேன். ஓ பன்னீர் செல்வம் என்னை வந்து சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்
எங்களுடைய கட்சிக்காரர்கள் இடையே வித்தியாசம் ஒன்றும் நாங்கள் பார்ப்பது கிடையாது. கண்டிப்பாக எல்லோரும் ஒன்றிணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். தற்போது அதிமுகவின் தோல்விக்கு பிரிந்து இருப்பது ஒன்று தான் முக்கியமான காரணம் ஆகும். அனைவரையும் ஒன்று சேர்ப்பதற்கு நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் அனைவரும் ஒன்று சேர்ந்து அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!












Click it and Unblock the Notifications