For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கர்ப்பிணி உயிரிழப்பு விவகாரம்.. கிரிமினல் குற்றம் என ஹைகோர்ட் தலைமை நீதிபதி கண்டனம்

கர்ப்பிணி உயிரிழப்பு விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கை கிரிமினல் குற்றத்துக்கு நிகரானது என சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்பிணி உயிரிழப்பு சம்பவத்தில் காவலர் மீது கொலை வழக்கு பதிய மனு- வீடியோ

    சென்னை: கர்ப்பிணி உயிரிழப்பு விவகாரத்தில் போலீசாரின் நடவடிக்கை கிரிமினல் குற்றத்துக்கு நிகரானது என சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    திருச்சி, திருவெறும்பூரில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் காமராஜ் ஹெல்மட் அணியாமல் சென்ற தம்பதியரின் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தார்.

    Its criminal activity: high court chief justice indira banerjee on Trichy usha case

    இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற உஷா என்ற மூன்று மாத கர்ப்பிணி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என வழக்கறிஞர் அஸ்வதாமன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் சென்னை ஹைகோர்ட்டில் முறையிட்டனர்.

    இதுதொடர்பாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறுகையில், இந்த சம்பவத்தில் போலீசாரின் நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. சட்டவிரோதமான செயல், சுருக்கமாக இது கிரிமினல் குற்றத்துக்கு நிகரான ஒரு செயல். இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.

    English summary
    Chennai high court condemns the Trichy incident. Chennai high court chief justice Indira banerjee says that Its criminal activity.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X