கருணாநிதி முன்னிலையில் தான் வேட்பாளரை அறிவிப்போம்: அடம் பிடிக்கும் கூட்டணி கட்சி
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் வேலூர் தொகுதியின் வேட்பாளரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் இ.அஹமது அறிவிக்க உள்ளார்.
ஏப்ரல் 24ம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணிக்கு ஜனநாயக முற்போக்கு கூட்டணி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பு தங்களுக்கு வேலூர் வேண்டும் என கேட்டுப் பெற்றது.

இதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சருமான இ.அஹமது, திமுக தலைவர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தங்களைச் சந்திக்க விரும்பிய எனக்கு, தங்களது கடுமையான பணிகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி அளவளாவியதற்கு நன்றி தெரிவிப்பதோடு, நீண்ட நெடிய பாரம்பரிய உறவு கொண்ட திமுக கூட்டணியில் வேலூர் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கித் தந்ததற்கு மனமார்ந்த நன்றி என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
நாளை காலை 11 மணிக்கு சென்னை காயிதே மில்லத் மன்ஸிலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெறுகின்றது.
இதனையடுத்து அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் வேலூர் தொகுதியின் வேட்பாளரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹமது அறிவிக்க உள்ளார். மேலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் தொகுதியில் ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடதக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications