எச்சக்கல, பொறம்போக்கு, நாயே நாயே...! - கிளிப்பிள்ளை தீபாவின் ஒரிஜினல் பேச்சு இதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெத்த தாய் மாதிரி இருந்த ஜெயலலிதாவை சசிகலாவோடு சேர்ந்து கொன்னுட்டியேடா என்று தன் தம்பி தீபக்கை விளாசித் தள்ளினார் ஜெ தீபா.

சென்னையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் இல்லத்துக்கு சொந்தம் கொண்டாடி நேற்று வந்தார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா.

J Deepa alleged Deepak as conspirator in Jayalalithaa death

ஆனால் அவரை உள்ளே விடவில்லை. அவரை அடித்து விரட்டியதாகக் கூறப்பட்டது. ஜெயலலிதா வீட்டிலிருந்து ஆவேசமாக வெளியே வந்த ஜெ.தீபா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் வழக்கமாக பேட்டி அளிக்கும்போது அமைதியாக பேசுவார். கிளிப்பிள்ளை மாதிரி, 'அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்... நான் யோசித்து சொல்கிறேன்...' என்றுதான் சொல்லிக் கொண்டிருப்பார்.

ஆனால், நேற்று எந்த ஒத்திகையும் இல்லாத அவரது உண்மையான பேச்சு வெளிப்பட்டது.

தான் தாக்கப்பட்டது குறித்து அவர் கூறுகையில், "தீபக் சசிகலாவின் ஆள். அவன்தான் என்னை வரவச்சான். அம்மாவை சசிகலாவோடு, தீபக்கும் சேர்ந்துதான் கொன்றுவிட்டான். பொறம்போக்கு... சொந்த அத்தையை, பெத்த தாய் மாதிரி இருந்தவங்களை கொன்னுட்டான். பணத்துக்காக தீபக் இதை செஞ்சிட்டான்...," என்று பெரும் குரலில் கத்தினார்.

திட்டமிட்டு ஒத்திகை பார்த்துதான் அவர் இதுவரை செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். இதெல்லாம் எதுவுமில்லாமல் நேற்று சந்தித்த போது எச்சக்கல, பொறம்போக்கு, நாயே என ஏகப்பட்ட வார்த்தைகளை மீடியாவுக்கு முன் கொட்டிவிட்டார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
J Deepa has alleged that her own brother Deepak is one of the conspirator in Jayalalithaa death (Murder).
Please Wait while comments are loading...