இன்னும் எத்தனை பேரை பலியாக்க போகிறது இந்த நீட் என்னும் உயிர்க்கொல்லி ?- ஜெ.தீபா
இன்னும் எத்தனை பேரை பலியாக்க போகிறது இந்த நீட் என்னும் உயிர்க்கொல்லி என்று ஜெ தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் பிரதீபா என்ற பெண் இறந்ததை அடுத்து இன்னும் எத்தனை பேரை பலிவாங்க போகிறதோ இந்த நீட் தேர்வு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2016-இல் அரியலூரை சேர்ந்த அனிதாவின் உயிரைக் குடித்தது இந்த நீட் தேர்வு.

மேலும் இந்த ஆண்டு தேர்வு அலைக்கழிப்பால் பெற்றோருக்கு மாரடைப்பு ஏற்பட்டு 3 பேர் பலியாகினர். இதையடுத்து விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பெரவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா, நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டார்.
10ம் வகுப்பில் 490, 12ம் வகுப்பில் 1125 மதிப்பெண்ணும் எடுத்த மாணவி பிரதீபா நீட் தேர்வில், நிச்சயமாக தோல்வியடையவில்லை, மத்திய அரசும், இந்த கல்வி முறையுமே தோல்வியடைந்திருக்கிறது...
— J.Deepa (@JDeepaOfficial) June 6, 2018
இன்னும் எத்தனை பேரை பலியாக்க போகிறது இந்த நீட் என்னும் உயிர்க்கொல்லி ?#RIPPradepa #JDeepa pic.twitter.com/lweR7KrHGn
இதுகுறித்து ஜெ. தீபா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் 10-ம் வகுப்பில் 490, 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்ணும் எடுத்த மாணவி பிரதீபா நீட் தேர்வில், நிச்சயமாக தோல்வியடையவில்லை, மத்திய அரசும், இந்த கல்வி முறையுமே தோல்வியடைந்திருக்கிறது... இன்னும் எத்தனை பேரை பலியாக்க போகிறது இந்த நீட் என்னும் உயிர்க்கொல்லி ? என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
