இன்னொரு 'பொலிடிகல் மிராக்கிள்'.. சசிகலா- ஓபிஎஸ் அணிகளை மிரட்ட தீபா முடிவு
சசிகலா மற்றும் பன்னீர் அணியை மிரட்ட ஜெ.தீபா இன்னொரு அதிரடி முடிவெடுத்துள்ளார். அ.தி.மு.க. கட்சியை கைப்பற்ற முடிவெடுத்துள்ளார் தீபா என்று பரபரப்பைக் கிளப்புகிறது தீபா அணி.
சென்னை: தன்னால் அரசியலில் தனி ஆவர்த்தனம் செய்ய முடியாது என்று உணர்ந்துள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, சசிகலா மற்றும் பன்னீர் அணிக்கு எதிராக அ.தி.மு.க. தொண்டர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட புதிய முடிவெடுத்துள்ளாராம்.
இது தொடர்பாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையினர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்து, கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்ற கடுமையான போட்டி நிலவுகிறது.
தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா செய்த மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்.
அதே நேரத்தில் பன்னீர் அணியும் சசிகலாவின் அணியும் கட்சியையும் இரட்டை இலையையும் முடக்கி வைத்துள்ளனர். இதை பயன்படுத்தவுள்ளதாம் தீபா அணி.

அதிமுகவின் துணை அமைப்பாக
அதை இப்போது பறிகொடுத்துவிட்ட நிலையில் அ.தி.மு.க. இருக்கிறது. எனவே எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவையை, அ.தி.மு.கவின் துணை அமைப்பாக மாற்றி, அ.தி.மு.க தீபா அணியாகச் செயல்பட முடிவு நாங்கள் முடிவெடுத்துள்ளோம்.

இரட்டை இலை மீட்பு
இதன் மூலம், இரட்டை இலை மற்றும் கட்சியை மீட்பது என்றும், தீபாவை பொதுச்செயலராக்குவது என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

ஒன்றிணைக்க
இதன் மூலம் சசிகலா மற்றும் பன்னீர் அணிகளில் உள்ள அதிருப்தியாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கவும் முடியும் என்று தீபா கருதுகிறார். எனவே நாங்கள் அவரின் முடிவுக்கு செயல் வடிவம் கொடுக்கவும் தீவிரமாக செயல்படவிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

அதிமுகவினர் ஏற்பார்களா?
அதிமுகவினர் இதை ஏற்பார்களா, மக்கள் இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications