For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக அரசியல் வரலாற்றில் சகாப்தம் படைத்த கருணாநிதி- ஜெ.தீபா பாராட்டு

தமிழக அரசியல் வரலாற்றில் சகாப்தம் படைத்தவர் கருணாநிதி என்று ஜெ.தீபா பாராட்டு தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாநிதி உடல்நலத்தை விசாரிக்கும் தலைவர்கள்...வீடியோ

    சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் சகாப்தம் படைத்தவர் கருணாநிதி என்று ஜெ. தீபா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    கருணாநிதிக்கு உடல்நிலை பாதிப்பால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் குறித்து பேஸ்புக்கில் தனது நினைவுகளை ஜெ.தீபா பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து தனது பதிவில் ஜெ.தீபா கூறுகையில் தமிழக அரசியல் வரலாற்றில் கருணாநிதி அவர்கள் 50 ஆண்டுகள் சகாப்தம் படைத்தவர். அவர் ஆற்றிய நற்பணிகளை நாம் இந்நேரத்தில் நினைவு கூற வேண்டும்.

    5 முறை முதல்வர்

    5 முறை முதல்வர்

    தமிழக அரசியலில் ஜனநாயக தலைவராக செயல்பட்டு மற்றவர்கள் சொல்லும் கருத்தை கேட்டு ஆராய்ந்து செயல்படுத்தியவர் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் _ ஐந்து முறை முதலமைச்சராகவும் ஐம்பது ஆண்டு காலம் அரசியல் தலைவராகவும் இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு பெற்றவர் டாக்டர் *கலைஞர்* அவர்கள்.

    தனி வாழ்த்து பாடல்

    தனி வாழ்த்து பாடல்

    இந்தியாவிற்கு தேசியகீதம், தேசியகொடி,தேசிய சின்னம் இருப்பதுபோல் மாநிலங்களுக்கும் தனி சின்னம், தனிக்கொடி ,தனி வாழ்த்துப்பாடல் வேண்டும் என்று மத்திய அரசிடம் போராடியவர் கலைஞர். ஆனால் தனி சின்னம் ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோபுரத்தையும், தமிழ்மொழி வாழ்த்து பாடலாக சுந்தரம்பிள்ளை அவர்களின் வாழ்த்துப்பாடலையும் நமக்கு சட்டமாக்கி கொடுத்தவர் கலைஞர்.

    காமராஜர் படம்

    காமராஜர் படம்

    ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தால் தமிழகத்தின் தடுப்புசுவராக தமிழ் மொழியின் பாதுகாவலராக இருந்தவர் கருணாநிதி அவர்கள் - எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஒரு முறை முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் தனது அறைக்குத் தனிமையிலே கருணாநிதியை அழைத்துச் சென்று, சட்டமன்றத்திற்குள் திறக்கப்படவிருந்த _ பெருந்தலைவர் காமராஜர் திருஉருவப் படத்திற்குக் கீழே என்ன வார்த்தைகளை எழுதலாம் என்பதைக் பற்றி எழுதித் தருமாறு கேட்டுக்கொண்டார்.

    மகிழ்ச்சி

    மகிழ்ச்சி

    அதற்கு கருணாநிதியும் மகிழ்ச்சியுடன், ' *உழைப்பே உயர்வு தரும்* !' என்று எழுதிக் கொடுத்தார். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் அப்போது நடந்துகொண்ட முறையை நினைக்கும் போது மகிழ்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும் என்று கருணாநிதி கூறினார் என்று ஜெ.தீபா நினைவுக்கூர்ந்தார்.

    English summary
    J.Deepa recalls her memories about Karunanidhi's health condition in Facebook. She also releases his photo with MGR.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X