ஜெயலலிதா டிசம்பர் 5ல் தான் இறந்தாரா?...'சிங்கிளாக' வந்து மாதவன் அளித்த பிரமாணப்பத்திரத்தில் கேள்வி?
ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக ஜெ. தீபாவின் கணவர் மாதவன் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
Recommended Video

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜெ. தீபாவின் கணவர் மாதவன் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷனிடம் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒரு நபர் விசாரணைக் கமிஷன் விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து ஜெயலலிதா மரணம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பிரமாணப் பத்திரங்கள் அளிக்கலாம் என்று நீதிபதி ஆறுமுகசாமி கூறியுள்ளார்.
நீதிபதி ஆறுமுகசாமி இன்னும் களத்தில் இறங்கி விசாரணையைத் தொடங்காத நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து இந்த விசாரணை ஆணையத்திற்கு 7 பிரமாணப் பத்திரங்கள் வந்துள்ளன. இந்நிலையில் ஜெ. தீபாவின் கணவர் மாதவன் சென்னை எழிலகத்தில் உள்ள நீதிபதி ஆறுமுக சாமி விசாரணை கமிஷனிடம் 18 கேள்விகள் அடங்கிய பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார்.

ஜெ. மரணத்தில் சந்தேகம்
அந்த பிரமாணப் பத்திரத்தில் ஜெயலலிதா மரணம் குறித்த தகவல்களை தெரிவிக்கவில்லை என்று, மரணத்தில் இருக்கும் சந்தேகங்கள் தொடர்பான 18 கேள்விகளையும் ஆணையத்திடம் மாதவன் அளித்துள்ளார். ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதி தான் மரணம் அடைந்தாரா என்பதில் மாதவன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

எம்பார்மிங் ஏன் செய்யப்பட்டது?
டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தால் அடுத்த நாளே இறுதிச் சடங்குகள் நடந்த நிலையில் ஏன் அவருக்கு எம்பார்மிங் செய்யப்பட்டது என்றும் மாதவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதே போன்று ஜெயலலிதா மரணத்தில் வெளிவராத பல உண்மைகள் குறித்தும் மாதவன் ஆணையத்திடம் கேள்வியாக அளித்துள்ளார்.

தீபா வரவில்லை
இந்தப் பிரமாணப் பத்திரத்தை அவர் தன்னுடைய கட்சியினருடன் வந்து தாக்கல் செய்தார். அவருடன் ஜெ. தீபா வரவில்லை, இருவரும் அண்மையில் ஒன்று சேர்ந்த நிலையில் போயஸ் கார்டனில் நள்ளிரவு நடந்த சோதனையின் போது ஜெ. தீபாவுடன் மாதவன் வரவில்லை என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

தீபாவை விட்டு பிரிந்தாரா?
போயஸ் கார்டன் வீட்டிற்குள் தீபக் வரச் சொன்னதாக சென்று சிக்கலில் மாட்டினார் ஜெ. தீபா. அப்போது தனது கணவர் மாதவன் உதவியை கேட்டார் தீபா, இதனையடுத்து இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் ஒழிந்து இருவரும் தி.நகர் வீட்டில் வசித்து வந்த நிலையில் மீண்டும் இருவரிடையே பிரிவு ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications