ராஜாவை நீக்கியது சரி!... மறுபடியும் எப்போது சேர்ப்பார் தீபா? இதே வேலையா போச்சு!
Recommended Video

சென்னை: டிரைவர் ராஜாவை ஜெ தீபா கட்சியிலிருந்து நீக்கிவிட்டார் சரி, மீண்டும் எப்போது சேர்ப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ராஜாவை நீக்குவதும், மீண்டும் சேர்ப்பதும் ஜெ தீபாவுக்கு வாடிக்கையாக போய்விட்டது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கினார். இதில் அவரது நண்பரும் கார் டிரைவருமான ஏ.வி. ராஜாவுக்கு முக்கிய பொறுப்பை வழங்கியிருந்தார். இதனால் தீபாவுக்கு கணவர் மாதவனுக்கும் இடையே பிரச்சினை எழுந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயஸ் தோட்டத்துக்கு வந்தார் தீபா. அப்போது சசிகலாவையும் தனது சகோதரர் தீபக்கையும் அவர் கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது ராஜாவும் மாதவனும் உடனிருந்தனர்.

ஜனவரியில் நீக்கம்
இதனிடையே சாலையிலேயே மாதவனை தீபா கண்டபடி பேசுவதும் ராஜாவும் மாதவனை தகாத வார்த்தைகளால் பேசியதும் பார்ப்போரை முகம் சுளிக்க வைத்தது. இந்நிலையில் திடீரென ராஜா பேரவையின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக கூறி அவரை கட்சியிலிருந்து ஜனவரி 8-ஆம் தேதி நீக்கிவிட்டார்.

புதிய பதவி
நீக்கப்பட்டவர் அவ்வளவுதான் என்றிருந்த நிலையில் திடீரென பிப்ரவரி 2-ஆம் தேதி ராஜாவை மீண்டும் கட்சியில் இணைத்து கொள்வதாக தீபா அறிவித்தார். அதுவும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் தலைமை நிலைய மாநில செயலாளர் என்ற புதிய பதவியுடன் வந்தார்.

இதே வேலைதான்
இந்நிலையில் இப்படியே உள்ளே வெளியே விளையாடிக் கொண்டிருந்த தீபா மறுபடியும் இன்றைய தினம் ராஜாவை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிரடியாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதை கேள்விப்பட்ட மக்கள் இவர்களுக்கு இதே வேலைதான் என சலித்து கொள்கின்றனர்.

ராஜாவை நீக்குவதும் சேர்ப்பதும்
கட்சி தொடங்கி இதுவரை மக்களுக்கு ஏதேனும் பிரயோஜனமாக தீபா செய்ததுண்டா. தனது பெயர் லைம்லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகவே மாதவனுடன் சண்டையிடுவதும் ராஜாவை நீக்குவதும் சேர்ப்பதுமாக இருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது.

மக்கள் கருத்து
கடந்த முறை நீக்கப்பட்டு ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் சூப்பர் பதவியுடன் மீண்டும் சேர்த்துக் கொண்ட தீபா தற்போது அடுத்த மாதம் ராஜாவை மீண்டும் சேர்த்து கொள்ளமாட்டார் என்பது என்ன நிச்சயம். ஒரு சில விவகாரங்களுக்கு டுவிட்டரில் கண்டனம் போடுவதுடன் நிறுத்திக் கொண்டால் போதுமா. ஆர்ப்பாட்டம், போராட்டம் எதையாவது செய்வதுண்டா. அப்போதுதானே கட்சியின் பலம் மக்களுக்கும் மற்ற கட்சிகளுக்கும் தெரியவரும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications