ராஜம்மாளுக்கு என்னை தெரியாதாம்.... தீபக்கை மட்டும் தெரியுமாம்... வேடிக்கையா இருக்கே...ஜெ.தீபா
ராஜம்மாளுக்கு என்னை தெரியாது, ஆனால் தீபக்கை மட்டும் எப்படி தெரியும் என்று ஜெ.தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ராஜம்மாளுக்கு என்னை தெரியாது, ஆனால் தீபக்கை மட்டும் எப்படி தெரியும் என்று ஜெ.தீபா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மரண விவகாரம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தில் ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவருடன் நெருங்கி பழகியவர்கள் என 22-க்கும் மேற்பட்டோருக்கு ஆணையம் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி விட்டது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜெ.வீட்டு சமையலர் ராஜம்மாளுக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர் ஆஜராகினார். அப்போது அவர் ஜெ.தீபாவை யாரென்றே தெரியாது என்றும் அவரை போயஸ் தோட்டத்தில் இதுவரை பார்த்ததில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் போயஸ் தோட்டத்தில் அவரை .யாரும் தாக்கவில்லை என்றும் அவர் கூறுவது போல் அடியாட்களும் இல்லை என்றும் ராஜம்மாள் வாக்குமூலம் அளித்திருந்தார்.
இதுகுறித்து ஜெ.தீபா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமையல் வேலை செய்யும் ராஜம்மாள் உயிருக்கு பயந்தோ அல்லது ஆதாயத்திற்காகவோ என்னை தெரியாது என பொய் சொல்லியிருக்க வேண்டும். அவர் கடந்த 1996-இல் சசிகலாவால் நியமிக்கப்பட்ட வேலையாள். எனது அத்தையால் 1998-இல் போயஸ் கார்டனை விட்டு துரத்தப்பட்ட ராஜம்மாள் மீண்டும் சசிகலாவால் உள்ளே சேர்க்கப்பட்டார்.
நிச்சயம் ராஜம்மா கூறுவதில் துளி கூட உண்மை இல்லை. காரணண் என்னை யாரென்றே தெரியாது எனக் கூறும் அவர் என் சகோதரர் தீபக்கை தெரியும் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது. நானே ராஜம்மாவை 1996 காலகட்டத்தில் நேரில் பார்த்துள்ளேன். அவர்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து மக்களை முட்டாள் ஆக்க நினைக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.
இவர்களது முரண்பட்ட வாக்குமூலங்கள் மூலம் போயஸ் இல்லத்தில் ஏதோ தவறாக நடந்துள்ளது, என்பது தெளிவாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு ஏற்பட்ட நிலையை மக்களாகிய நீங்கள் என்னோடு சேர்ந்து கேள்வி கேட்க வேண்டும்.... அம்மாவின் மர்ம மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்... இவர்களது நாடகத்துக்கு விரைவில் மூடு விழா நடத்தி துரோக கூட்டத்தை விரட்டியடிக்க வேண்டும் என்று தீபா கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications