அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்- போர்க்களமானது சென்னை!
Recommended Video

சென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் சென்னை மாநகர் போர்க்களமாக காட்சியளிக்கிறது.
ஊதிய உயர்வு , புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.

சென்னை சேப்பாக்கத்தில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட வந்தவர்களை தடுத்து நிறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 1,400க்கும் மேற்பட்டோரை கைது செய்யும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட சென்ற ஜாக்டோ ஜியோ அமைப்பினர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் வாலாஜா சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனால் வாலாஜா சாலை சந்திப்பில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அலுவலகம் செல்லாமல் பல இடங்களில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் கலைவாணர் அரங்கம் அருகிலும் நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேப்பாக்கத்தில் மறியல் நடத்திய ஊழியர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டனர். அப்போது பெண் ஊழியர்கள் மயங்கி விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. கைது செய்ய செய்ய ஊழியர்கள் வந்துகொண்டே இருப்பதால் போலீசார் செய்வதறியாது திகைத்துள்ளனர்.


-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications