வயிற்றுக்குள் 2.5 கோடி "போதை".. "அயன்" சாந்தினி அதிரடி கைது!
சென்னை: அயன் படத்தில் பார்த்திருப்போம்.. சிறிய டியூப் மாத்திரைக்குள் போதைப் பொருட்களை நிரப்பி அதை வாயில் போட்டு விழுங்கி விடுவார்கள். பிறகு வெளிநாடுகளுக்கு கடத்திச் சென்று அங்கு மலமிளக்கி கொடுத்து வெளியில் எடுப்பார்கள். அதே பாணியில் கொழும்பிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த பெண்ணை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கொழும்பு நகரிலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று மாலை ஆறரை மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை வழக்கம் போல சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயதான சாந்தினியும் அந்த விமானத்திலிருந்து இறங்கி வந்தார். அவர் குறித்து முன்கூட்டியே சில தகவல்கள் கிடைத்திருந்ததால் சுங்கத்துறையினர் அந்தப் பெண்ணை மட்டும் தனியாகப் பிரித்துப் போய் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை மத்திய வருவாய் புலனாய்வு துறையின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்தனர். அப்போது அவரது வயிற்றில் சில பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனது வயிற்றில் டியூப்களில் போதைப் பொருட்கள் இருப்பதாக ஒப்புக் கொண்டார் சாந்தினி.
இதையடுத்து அவருக்கு எனிமா கொடுத்து அனைத்து மாத்திரைகளையும் வெளியில் எடுத்தனர். அவரது வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட டியூப்களில் ரூ. 2.5 கோடி அளவுள்ள போதைப் பொருட்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவரைக் கைது செய்த அதிகாரிகள் தற்போது இதுதொடர்பாக இயங்கி வரும் நெட்வொர்க் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications