ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடத்தப்படும்.. போன வருடம் மாதிரியே பேசும் பொன்.ராதாகிருஷ்ணன்
ஜல்லிக்கட்டு அடுத்த ஆண்டு நடத்தப்படும் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வரும் பொங்கல் விழாவின்போது ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

புதிய 500 ரூபாய் நோட்டு கிடைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடியும், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியும் தெரிவித்துள்ளனர்.
கருப்பு பண ஒழிப்பு குறித்து முன் அறிவிப்பு கொடுத்து விட்டு நடவடிக்கை எடுத்து இருக்கலாம் என காங்கிரஸ், தி.மு.க. கூறுவது ஏற்புடையது அல்ல. அது கருப்பு பண முதலாளிகள் ஆதாயம் பெற வழி வகுத்து இருக்கும் என்றார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். கடந்த வருடமும் ஜல்லிக்கட்டு நாள் வரை பொன்.ராதாகிருஷ்ணன் இவ்வாறுதான் கூறிவந்தார் என்பதும் ஆனால் அது நடவாமலே போனதும் நினைவில் இருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications