ஜல்லிக்கட்டு.. சென்னை கலவரம்.. அச்சமின்றி வாக்குமூலம் அளிக்க பொதுமக்களுக்கு நீதிபதி வேண்டுகோள்!
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்த தகவல்களை பொது மக்கள் அச்சமின்றி வாக்கு மூலம் அளிக்கும்படி தனிநபர் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் முடிவில் வன்முறை வெடித்தது. இது தொடர்பான விசாரணையில் பொதுமக்கள் எந்தவொரு தயக்கமுமின்றி பிரமாண வாக்கு மூலம் அளிக்கும்படி தனிநபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் ஒய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கலைத்த போது ஜனவரி மாதம் 23-ம் தேதியன்று சென்னையில் பெரும் கலவரம் வெடித்தது.

கல்வீச்சு, குடிசை, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு என போலீசாரே வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவங்களின் ஒளிப்பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து இந்த வன்முறை குறித்து, நீதி விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் போலீசாரின் வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவித்தன.
பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உட்பட, சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் சூழல் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஸ்வரனை கொண்ட தனிநபர் விசாரணை ஆணையத்தை கடந்த ஜனவரி 31-ம் தேதி அமைத்தது. இதனையடுத்து சட்டம் ஒழுங்கு, காவல்துறை அத்துமீறல் குறித்து புகார் கூறப்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்ற ஓய்வு நீதிபதி ராஜேஸ்வரன் முதற்கட்ட ஆய்வு பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் தொடர்பாக இது வரை 128 பிரமாண பத்திரங்கள் வாக்குமூலம் வந்துள்ளதாக கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு போராட்ட கலவரம் குறித்து அச்சமின்றி மக்கள் பிரமாண வாக்கு மூலம் வழங்க 7ம் தேதி மீண்டும் நாளிதழில் விளம்பரம் அளித்திட உள்ளதாகவும், பொதுமக்கள் எந்தவொரு தயக்கமுமின்றி பாதிக்கப்பட்ட விஷயங்களை தெரிவிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
தமது தலைமையில் விசாரணை நான்கு மாதங்கள் நடைபெறும் எனவும் நீதிபதி ராஜேஷ்வரன் தெரிவித்தார். மேலும் தனது விசாரணையின் போது அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு சம்மன் அனுப்பபடும் எனவும் அனைத்து போட்டோ மற்றும் வீடியோ ஆதராங்கள் பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications