தஞ்சையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு… 20 காளைகளை பிடித்து இளைஞர்கள் ஆராவாராம்
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்காத நிலையில் இன்று தஞ்சையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது
தஞ்சை: ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் திருவிழா நிறைவேறாது என்று கூறி இன்று தஞ்சையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு காளைகளை அடக்கினார்கள்.
பொங்கல் திருவிழாவின் போது, ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும் அதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முழுக்க போராட்டங்கள் கொழுந்துவிட்டு எரிந்தும், மத்திய அரசு அதுதொடர்பான அவசரச் சட்டத்தை கொண்டு வரவில்லை. உச்ச நீதிமன்றமும், இதுதொடர்பான வழக்கில் இடைக்கால தீர்ப்பு எதனையும் வழங்க முடியாது என்று கைவிரித்து விட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்டப் பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து, மாட்டுப் பொங்கலான இன்று தஞ்சாவூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தஞ்சை புதுவன்சாவடியில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்கென பிரத்தேயகமாக வாடிவாசல் அமைக்கப்பட்டது. இதில் 20க்கும் மேற்பட்ட காளைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
தடையை மீறி நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில் நூற்றுக்கணக்கான மாடுபிடி இளைஞர்கள் கலந்து கொண்டு காளைகளை விரட்டிப் பிடித்தனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications