வாடிவாசலுக்காக போராடியவர்கள் நெடுவாசலை காக்க ஆதரவு - சென்னையில் மார்ச் 2ல் உண்ணாவிரதம்
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஜல்லிக்கட்டு இளைஞர்கள் அமைப்பு சென்னையில் மார்ச் 2ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
சென்னை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக சென்னையில் 2ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய இளைஞர் மாணவர் அமைப்பு அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசல் உள்ளிட்ட 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான திட்ட ஆய்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 12 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விவசாயம் பாதிக்கும்
நிலத்தில் இருந்து இயற்கை எரிவாயுவை எடுப்பது சுற்றுசூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக நிலத்தடி நீர் வளம் குறையும் என்பதும் இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்களின் குற்றச்சாட்டு. இதுபோன்ற திட்டங்கள் பொதுவாக கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் செயல்படுத்தப்படும். அம்மாதிரி செயல்படுத்தப்படும் போது, நிலத்தடியில் உள்ள நீர்வளம் குறையும் என்ற பிரச்சனை எழுவதில்லை. ஆனால் தற்போது விவசாயப் பகுதியில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதுதான் முக்கிய எதிர்ப்புக்குக் காரணம்
குவியும் இளைஞர்கள்
நெடுவாசல் கிராம மக்களுடன் இணைந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பல்வேறு அமைப்பினரும் நெடுவாசலில் முகாமிட்டு போராட்டத்தை வலுப்பெற செய்துள்ளனர். நெடுவாசலில் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் குவிவதை தடுக்க 7 இடங்களில் சோதனைச் சாவடி அமைத்து காவல்துறையினர் தடுத்து வருகின்றனர்.
சென்னையில் கண்காணிப்பு
நெடுவாசல் இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் இளைஞர்களும், மாணவர்களும் போராட்டத்தில் குதிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக உளவு பிரிவு போலீசாரும் உஷார்படுத்தி உள்ளனர். இதனையடுத்து சென்னையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படும் இடங்களில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சேப்பாக்கம், எழும்பூர், நுங்கம்பாக்கம் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பை அதிகப்படுத்தி இருக்கிறார்கள்.
மெரீனாவில் கண்காணிப்பு
மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு திரண்டது போல மாணவர்கள் எரிவாயு திட்டத்துக்கு எதிராகவும் கூடி விடக்கூடாது என்பதில் போலீசார் மிகவும் கவனமுடன் உள்ளனர். இதற்காக மெரினாவிலும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
மார்ச் 2ல் உண்ணாவிரதம்
இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் மார்ச் 2ஆம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்திய இளைஞர் மாணவர் அமைப்பு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
அனுமதி கிடைக்குமா?
மார்ச் 2ஆம் தேதி குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வர உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு இளைஞர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications