வம்படி ஜல்லிக்கட்டுக்கு நத்தம் கோவில்பட்டியிலும் எதிர்ப்பு: தமிழக அரசின் முயற்சி முறியடிப்பு
திண்டுக்கல்: தமிழக அரசு நத்தம் கோவில்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த போட்டுள்ள திட்டத்தை அறிந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ஏற்க மக்களும், புரட்சியாளர்களும் தயாராக இல்லை. இந்நிலையில் மதுரை அலங்காநல்லூரில் தமிழக அரசு சார்பில் வலுக்கட்டாயமாக நடத்தப்படவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அந்த ஊர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தால் அறிவித்தபடி அலங்காநல்லூர் சென்று ஜல்லிக்கட்டை நடத்த முடியவில்லை. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தில் காலை 11 மணிக்கு ஜல்லிக்கட்டை முதல்வர் துவங்கி வைப்பார் என்று கூறப்பட்டது.
இது குறித்து அறிந்த கிராம மக்கள் குறிப்பாக இளைஞர்கள் முதல்வரின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் கையில் தேசியக் கொடியுடன் வாடிவாசலை மறித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கிராம மக்களின் கொந்தளிப்பால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அலங்காநல்லூரை அடுத்து கோவில்பட்டியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இங்கும் தமிழக அரசின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
எங்கள் ஊரில் இன்று ஜல்லிக்கட்டு நடத்த வாய்ப்பே இல்லை என்று கோவில்பட்டி கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications