ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பாகிஸ்தான் நிதி உதவி செய்ததாம்..தமிழர் உணர்வை கொச்சைப்படுத்தும் சு.சாமி
சென்னையில், நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் தேச விரோத சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு நிதி உதவி செய்தது, என்று கூறியுள்ளார் பாஜக எம்.பி சு.சாமி.
சென்னை: ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ நிதி உதவி செய்ததாக கூறியுள்ளார் பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி. இதன் மூலம், தமிழர்கள் தங்கள் பாரம்பரியம் காக்க நடத்திய போராட்டத்தை கொச்சைப்படுத்தி மொத்த தேசத்தையும், தமிழகத்தை சந்தேக கண்கொண்டு பார்க்க வைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் அவர்.
மீடியா நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சு.சாமி கூறுகையில், ஜல்லிக்கட்டு நடைபெறாமல் தடுத்தது காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசு. நான் ஆரம்பம் முதலே ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெற வகை செய்து சட்ட போராட்டம் நடத்தி வருகிறேன்.

அதேநேரம் சென்னையில், நடைபெற்ற ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் தேச விரோத சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ நிதி உதவி செய்தது. எனவேதான் நேற்று திடீரென சென்னையில் கலவரம் வெடித்தது.
ஜல்லிக்கட்டுக்காக மட்டுமே போராடியவர்கள் ஏற்கனவே மெரினாவை விட்டு கிளம்பி சென்றுவிட்டனர். ஆனால் போராட்டத்தை தொடர்ந்தவர்கள் தங்கள் கைகளில் பிரபாகரன் (விடுதலை புலிகள் தலைவர்) மற்றும் ஹபீஸ் சையது (லஷ்கர்-இ-தொய்பா) போட்டோக்களை வைத்திருந்தனர்.
போராட்டம் செய்தவர்களை, தடியடி நடத்தி விரட்டியடித்ததன் மூலம், பன்னீர்செல்வம் அரசு சிறப்பாக பணியாற்றியுள்ளது என்று கூறியுள்ளார் சு.சாமி.
ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் வலுப்பெற தொடங்கியதும் கடுமையான கடுப்புக்கு உள்ளானவர்களில் சு.சாமியும் ஒருவர். அவர் தமிழர்களை பொறுக்கிகள், நக்சல்கள், எலிகள், ஜிகாதிகள் என்றெல்லாம் குறிப்பிடும் வகையில் டிவிட்டரில் கருத்து கூறி வந்தார். ஆனால் இதுவரை அவருக்கு எதிராக பாஜக தலைமையோ அல்லது, தமிழக பாஜக தலைவர்களோ எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் சப்பை கட்டு கட்டி வருவது கவனிக்கத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications