For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் ஜப்பான் மன்னர்... டான்ஸ் பார்த்தார்.. ஜெ., ஆளுநரைச் சந்தித்தார்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜப்பான் மன்னர் அஹிட்டா, ராணி மெஸிகோ ஆகியோர் 2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வந்துள்ளனர். நேற்று புதன்கிழமை சென்னை வந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று இருவரும் ஆளுநர் ரோசைய்யா மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை சந்தித்தனர். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஜப்பான் மன்னர் மற்றும் ராணிக்கு ஆளுநர் ரோசய்யா விருந்து அளித்தார்.

Japanese Emperor Akihito and Empress Michiko being welcomed on their arrival in Chennai

இதில் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ஜப்பான் மன்னர் தம்பதியரை கவுரவிக்கும் வகையில் சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

சிறப்பு அஞ்சல் தலையை, ஆளுநர் ரோசய்யா மன்னர் தம்பதியிடம் வழங்கினார்.

Japanese Empress Michiko with Tamil Nadu Chief Minister J Jayalalitha

கலாசேத்திராவில் பரத நாட்டியத்தை ரசித்த மன்னர் தம்பதி

சென்னை வருகையின் ஒரு பகுதியாக நேற்று கலாச்சேத்திராவுக்கு சென்றது மன்னர் தம்பதி. அங்கு பரதநாட்டியத்தை ரசித்துப் பார்த்தனர் மன்னரும், அவரது மனைவியும். அவர்களுக்கு கலாச்சேத்திராவின் தலைவர் கோபாலகிருஷ்ண காந்தி பரதநாட்டியம் குறித்தும், கலாச்சேத்திரா குறித்தும் விளக்கிக் கூறினார்.

கிண்டி சிறுவர் பூங்காவுக்கும் விசிட்

Japanese Emperor Akihito and Empress Michiko interacting with school students at Guindy National

அதேபோல கிண்டியில் உள்ள தேசிய சிறுவர் பூங்காவுக்கும் மன்னர் அஹிகிடோ மற்றும் அவரது மனைவி மிசிகோ ஆகியோர் விசிட் அடித்தனர். அங்கு சுற்றிப் பார்த்த பின்னர் மாணவ மாணவியருடனும் கலந்துரையாடினர்.

English summary
The Majesty Emperor Akihito and Her Imperial Majesty Empress Michiko of Japan arrived at Chennai on a two days visit. The Royal family checked in at Taj Coromandel on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X