நாளை மாலை 5 மணிக்கு... காஞ்சிபுரத்தில் பேசுகிறார் ஜெயலலிதா!
சென்னை: முதல்வர் ஜெயலலிதா நாளை காஞ்சிபுரத்தில் தனது பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை போடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 14 நகரங்களில் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்த திட்டமிட்டு தற்போது ஒவ்வொரு ஊராகப் போய் வருகிறார் ஜெயலலிதா.
வழக்கம் போல வேனில் நின்றபடியோ அல்லது அமர்ந்தபடியோ அவர் இப்போது பேசுவதில்லை. மாறாக, மேடையில் சேர் போட்டு உட்கார்ந்து பேசுகிறார். சட்டசபையில் 110 அறிக்கையை வாசிப்பது போல அவர் தனது உரையைப் படிக்கிறார்.

சென்னையில் கடந்த 9-ம் தேதி தனது பிரசாரத்தைத் தொடங்கினார் ஜெயலலிதா. அதன் பின்னர் விருத்தாசலம், தருமபுரி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் அவர் பேசியுள்ளார். இதுவரை மொத்தம் 4 ஊர்களில் பேசி முடித்துள்ளார். இன்னும் 10 கூட்டம் பாக்கியுள்ளது.
இந்த நிலையில் நாளை மாலை 5 மணியளவில் காஞ்சிபுரம் அருகே உள்ள வாரணவாசியில் பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார் ஜெயலலிதா.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்திரமேரூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூர், செய்யார், வந்தவாசி ஆகிய 18 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டவுள்ளார்.
தற்போது ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்ட நெரிசல் அதிகரித்து பலர் காயமடைவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதாலும் காஞ்சிபுரம் கூட்டத்திற்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications