தவறான சிகிச்சை.. மேட்டூரில் கண் பார்வை பாதிக்கப்பட்ட 23 பேருக்கும் தலா ரூ. 3 லட்சம் உதவி-ஜெ. உத்தரவு
சேலம்: மேட்டூர் அரசு மருத்துவமனையில் தவறான கண் அறுவைச் சிகிச்சையால் பார்வை பாதிக்கப்பட்ட 23 பேருக்கும் தலா ரூ. 3 லட்சம் நிதியுதவு வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் மேட்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் 14ம் தேதி ஏழு பேருக்கும், 15ம் தேதி எட்டு பேருக்கும், 16ம் தேதி எட்டு பேருக்கும் என மொத்தம் 23 பேருக்கு கண் புரை அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சை முடிந்து, இரு நாட்களுக்கு பின், நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களது கண்களில் ஊற்றுவதற்காக சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

ஆனால், அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட 23 பேருக்கும் கண்ணில் புண் ஆறவில்லை. பார்வையும் பறிபோகத் தொடங்கியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு திரண்டு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தவறான ஆபரேசன் காரணமாக கண் பார்வை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவலும் பரவியது. எனவே, இதுபற்றி சேலம் மாவட்ட சுகாதாரதுறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்பார்வை பார்வை பாதிக்கப்பட்டுள்ளவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் வேலுமணி, அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கு மீண்டும் கண்பார்வை திரும்ப வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணில் கட்டுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கண் அறுவைச் சிகிச்சையால் பார்வை பாதிக்கப்பட்ட 23 பேருக்கும் தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், இவர்களில் 21 பேருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications