புறப்படுகிறார் ஜெயலலிதா.. 3 நாள் சூறாவளி தேர்தல் பிரசாரம்!
சென்னை: உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கட்சிப் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா 3 நாள் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகத்தில் கோவை, நெல்லை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும், 12 மாநகராட்சி வார்டுகள் 8 நகராட்சி தலைவர்கள், 53 நகராட்சி வார்டுகள், 7 பேரூராட்சி தலைவர்கள், 101 பேரூராட்சி வார்டுகள் உள்ளிட்ட காலியான உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 18-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
வேட்பு மனுதாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் வேட்பு மனுதாக்கல் முடிவடைந்தது.

அதிமுக போட்டி
அதிமுக சார்பில் கோவையில் கணபதி ராஜ்குமார், நெல்லையில் புவனேஸ்வரி, தூத்துக்குடியில் அந்தோணி கிரேஸி ஆகியோர் மேயர் பதவிக்கு போட்டியிடுகிறார்கள்.

பாஜகவும் போட்டி
அ.தி.மு.க. வேட்பாளர்கள் அனைவரும் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தனர். பா.ஜனதா வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுதாக்கல் செய்தனர். தி.மு.க. உள்ளிட்ட மற்ற கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.

3 நாள் பிரசாரம்
உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் கோவை, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சி அ.தி.மு.க. மேயர் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா 3 நாள் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

சூறாவளி பிரசாரம்
வருகிற 18-ந்தேதி நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் மேயர் வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிலவரப்படி தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு கழக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி தேர்தல் பிரசாரம் சுற்றுப் பயணம் செய்ய உள்ளார்.

12ம் தேதி தூத்துக்குடி
12.9.14 (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி மாநகராட்சி,
14.9.14 (ஞாயிறு) திருநெல்வேலி மாநகராட்சி,
15.9.14 (திங்கட்கிழமை) கோவை மாநகராட்சி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications