தூத்துக்குடி: ஹெலிகாப்டரில் வந்து வேன் மூலம் பிரசாரம் செய்து விட்டு சென்னைக்குப் பறந்த ஜெ.
தூத்துக்குடி: தூத்துக்குடி மேயர் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அந்தோணி கிரேசியை ஆதரித்து முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இன்று வேனில் அமர்ந்தபடி பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அதிமுகவினர் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். ஜெயலலிதா வருகையையொட்டி தூத்துக்குடி நகர் முழுவதும் பிரமாண்ட ஏற்பாடுகளையும் செய்திருந்தனர் அதிமுகவினர். நகரமே விழாக்கோலம் பூண்டுக் காணப்பட்டது.
கிட்டத்தட்ட சட்டசபை, லோக்சபா தேர்தல் போல பிரசாரத்திற்கு அதிமுகவினர் பலமான ஏற்பாடுகளைச் செய்து தூத்துக்குடியையே கோலாகலமாக அலங்கரித்து வைத்திருந்தனர் என்பபது குறிப்பிடத்தக்கது.

அந்தோணி கிரேசி
செப்டம்பர் 18ம் தேதி நடைபெறும் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் கிரேசி, பாஜக சார்பில் ஜெயலட்சுமி மற்றும் 5 சுயேச்சைகள் என மொத்தம் 7 பேர் களத்தில் உள்ளனர்.

தனி விமானத்தில் வந்த ஜெயலலிதா
அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேசியை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தூத்துக்குடிக்கு வந்தார்.

பிரமாண்ட வரவேற்பு
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்ஏவி பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் இறங்கிய அவருக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

வேன் மூலம் பிரசாரம்
இதைத் தொடர்ந்து அங்கிருந்து வேனில் டூவிபுரம் 5-ஆவது தெரு வழியாகச் சென்று, அண்ணாநகர் 7-ஆவது தெரு சந்திப்பில் வேனில் அமர்ந்தபடி பேசினார் ஜெயலலிதா.

அடுத்து திரேஸ்புரத்தில்
பின்னர், அங்கிருந்து விவிடி சிக்னல் வழியாக டபுள்யூஜிசி சாலைக்குச் சென்று குரூஸ் பர்னாந்து சிலை அருகே பேசினார். தொடர்ந்து, 1-ஆவது ரயில்வே கேட், வாடித்தெரு வழியாக திரேஸ்புரம் செல்லும் அவர், அங்கு கூடியிருக்கும் மக்கள் மத்தியில் வேனில் அமர்ந்தபடி பேசினார்.

சென்னை ரிட்டர்ன்
பிரசாரத்தை முடித்துவிட்டு எட்டயபுரம் சாலை வழியாக எஸ்ஏவி பள்ளி மைதானத்துக்குச் சென்று, அங்கிருந்து ஹெலிகாப்டரில் மீண்டும் சென்னை புறப்பட்டுச் சென்றார் ஜெயலலிதா.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications