ஜெ. முதல்வரானதும் காரில் ஏறிய தேசியக் கொடி!
சென்னை: தமிழகத்தின் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற உடனேயே அவரது காரில் இருந்த அ.தி.மு.க. கொடி அகற்றப்பட்டு தேசியக் கொடி பொருத்தப்பட்டது.
தமிழக முதலமைச்சராக 5 வது முறையாக ஜெயலலிதா இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதற்கான விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் எளிய முறையில் நடைபெற்றது.

பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்ட போது ஜெயலலிதாவின் காரில் அ.தி.மு.க. கொடி பறந்தது.
ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்த உடனேயே ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அவரது காரில் இருந்த அ.தி.மு.க. கொடியை அகற்றி விட்டு தேசியக் கொடியை பொருத்தினர்.
பதவியேற்ற பின்னர், தேசியக் கொடி பொருத்தப்பட்ட காரில் ஜெயலலிதா தலைமைச் செயலகத்திற்கு புறப்பட்டார்.
அப்போது வழியின் இரு மருங்கிலும் கூடியிருந்த தொண்டர்கள், உணர்ச்சி மிகுதியில் சென்று கொண்டிருந்த காரின் பக்கவாட்டில் சாலையிலேயே சாஷ்டாங்கமாய் விழுந்து கும்பிட்டனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அவர்களை தூக்கி விட்டனர்.
இதையடுத்து தலைமைச் செயலகத்திற்கு சென்ற ஜெயலலிதா கையெழுத்திடும் முதல் கோப்பு எது என்ற ஆவல் பலரையும் ஏன், எதிர்கட்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications