ஜெ. மரண விசாரணை: சசிகலாவிடம் 2,956 பக்க ஆவணங்கள் அளிக்கப்பட்டது
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இந்தவாரம் நடைபெறவிருந்த விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2,956 பக்க ஆவணங்களை சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம் அளித்துள்ளது. இந்த ஆவணங்களை படித்துவிட்டு 15 நாட்களுக்குள் பிரமானப்பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதியன்று மரணமடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ், ஜெ.தீபா உள்ளிட்டோர் சந்தேகம் எழுப்பினர். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தேகம் எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் அதிமுகவில் இணைவதற்கு விசாரணை ஆணையத்தை கோரிக்கையாக ஓபிஎஸ் வைத்தார். இதையடுத்து ஜெயலலிதா மறைவு குறித்து விசாரணை ஆணையம் அமைக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி கடந்த மாதம் தனது விசாரணையை தொடங்கினார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு பங்கு இருப்பதாக புகார் கொடுத்தது யார் என்று கூறினால் மட்டுமே தன்னால் சம்மனுக்கு பதில் தர முடியும் என்று நீதிபதி ஆறுமுகசாமியிடம் சசிகலா தரப்பு தெரிவித்தது.
இதனை ஏற்றுக்கொண்ட ஆணையம் சசிகலா கேட்ட புகார்தாரர் குறித்த விவரங்களை தர தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2,956 பக்க ஆவணங்களை சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம் அளித்துள்ளது. இந்த ஆவணங்களை படித்துவிட்டு 15 நாட்களுக்குள் பிரமானப்பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் இந்தவாரம் நடைபெறவிருந்த விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நீதிபதி ஆறுமுகசாமிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இந்தவாரம் நடைபெறவிருந்த விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி ஆறுமுகசாமி கோவையில் ஓய்வு எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் கார் டிரைவர் கண்ணன் நாளையும், ஜெயா டி.வி. சி.இ.ஓ. விவேக் ஜெயராமன் நாளை மறுநாளும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதேபோன்று ஜெயலலிதாவின் சமையல்காரர் சேகர் ஆகியோரிடம் மார்ச் 6ஆம் தேதிக்குப் பின் விசாரணை நடைபெறும் என்றும், எந்தெந்த தினங்களில் ஆஜராவது என்பது குறித்த புதிய சம்மன்கள் இன்று மாலை அனுப்பப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications