போயஸ் கார்டனை இளவரசிக்கு எழுதி வைத்து விட்டார் ஜெ... திடீர் தகவலால் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த, அவருக்குச் சொந்தமான போயஸ் கார்டன் வீட்டை, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கு உயில் எழுதி வைத்து விட்டதாக அவரது தரப்பு கூறுவதாக நியூஸ் 18 தொலைக்காட்சியின் செய்தி தெரிவிக்கிறது.

கோடானு கோடி அதிமுக தொண்டர்களை அதிர வைப்பதாக உள்ளது இந்த செய்தி. தமிழக மக்களுக்கும் பெரும் அதிர்ச்சி தருவதாக இந்த செய்தி வந்துள்ளது.

Jaya donates her poes garden house to Ilavarasi, says News 18

ஜெயலலிதாவின் தாயார் சந்தியா காலத்தில் வாங்கப்பட்ட வீடு இது. சந்தியா வாழ்ந்த வீடு இதுதான். ஜெயலலிதாவும் இங்குதான் வாழ்ந்து மறைந்தார். வேதா நிலையம் என்ற பெயர் கொண்ட இந்த வீட்டில்தான் பல அரசியல் சகாப்தங்களையும், புரட்சிகளையும் தொடங்கினார் ஜெயலலிதா.

இதே வீட்டில்தான் தற்போது சசிகலா குடும்பமே குடியேறி உள்ளது. இந்த வீட்டை நினைவிடமாக மாற்றப் போவதாக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இந்த நிலையில் திடீரென ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த வீட்டை இளவரசி பெயருக்கு ஜெயலலிதா உயில் எழுதி வைத்து விட்டதாக அந்தத் தகவல் கூறுகிறது.

நியூஸ் 18 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில், இந்த வீட்டை இளவரசி பெயருக்கு ஜெயலலிதா உயில் எழுதி வைத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இளவரசி, சசிகலாவின் அண்ணன் மனைவி ஆவார்.

இருப்பினும் 2016 சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டபோது தாக்கல் செய்த சொத்துக் கணக்கு விவரத்தில் இந்த வீடு, ஜெயலலிதா பெயரில் இருப்பதாகவே கூறப்பட்டிருந்தது. ஆனால் அதன் பிறகு எப்போது ஜெயலலிதா உயில் எழுதினார் என்பது பெரும் மர்மமாக உள்ளது.

இருப்பினும் இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் சசிகலா தரப்பு இதுவரை வெளியிடவில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Did Jayalalitha donate her poes garden house to Ilavarasi, wife of Sasikala's brother. According to a news piece on News 18 it says Jayalalitha has written a will on this.
Please Wait while comments are loading...