மோடியை விட ஜெயலலிதா தான் பிரதமர் ஆவதற்கு தகுதியானவர்: தா. பாண்டியன்

இது குறித்து அவர் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு விழாவில் பேசுகையில்,
இந்தியாவில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரே விஷயம் மோடி தான். பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மட்டுமே அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் ஒன்றும் பிரதமர் ஆகிவிடவில்லை.
அருணாச்சல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்து, கேரளா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லை என்றால் வேறு சில கட்சிகள் தான் வெற்றி பெற முடியுமே தவிர பாஜக வெற்றி பெறுவது நினைத்துக் கூட பார்க்க முடியாத கற்பனை கதை ஆகும். அப்படி இருக்கையில் மோடி எப்படி பிரதமராக முடியும்?
குஜராத் பல லட்சம் கோடி கடன் வாங்கிய மாநிலம் ஆகும். ஆனால் மோடியோ குஜராத் வளர்ச்சி பெற்ற மாநிலம் என்று கூறி வருகிறார். மேலும் ஊடகங்கள் அவரை பிரதமர் போன்று வர்ணிக்கின்றன.
வெறும் 2 மொழி (மோடிக்கு இந்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகள் தெரியும் என்று தா. பாண்டியனுக்கு தெரியாது போல) தெரிந்த ஒருவர் பிரதமர் ஆகலாம் எனில் 9 மொழிகளில் சரளமாக பேசக்கூடிய, நாட்டை திறமையாக நடத்தும் வல்லமை படைத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தான் பிரதமர் ஆகும் முழு தகுதியும் உள்ளது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications