"நம்பர் 2" ஆகப் போறாராமே "சின்ன அம்மா" சசிகலா??
சென்னை: அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்படவுள்ளது, என்ன அறிவிக்கப் போகிறார் ஜெயலலிதா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அவ்வளாக இல்லை என்ற போதிலும் அதிமுகவினர் மத்தியில் ஏகமாகவே உள்ளது. இதில் முக்கியாக சசிகலாவுக்கு முக்கியப் பொறுப்பு கொடுத்து ஜெயலலிதா அறிவிப்பு வெளியிடுவார் என்று பேச ஆரம்பித்துள்ளனர் அதிமுகவினர்.
இந்த நேரத்தில் சசிகலா குறித்த ஒரு பிளாஷ்பேக் நமக்கு ஞாபகம் வருகிறது. இது மற்றவர்களுக்கும் நினைவில் இருக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. பலர் மறந்திருக்கலாம்.
இந்த மறதிதான் தேசிய வியாதியாச்சே.. அந்த வகையில் சசிகலா குறித்த ஒரு குட்டி பிளாஷ்பேக் இது.

2011ல்
அது 2011ம் ஆண்டு. ஜெயலலிதா அப்போது நல்ல உடல் ஆரோக்கியத்துடன் படு சுறுசுறுப்பாக இருந்த நேரம். கட்சியில், "அம்மா"வைக் கண்டு அத்தனை பேரும் நடுங்கிய சமயமும் கூட. அப்போதுதான் ஒரு அதிரடி காட்டினார் ஜெயலலிதா.

சசிகலா நீக்கம்
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அத்தனை பேரையும் கட்சியை விட்டு நீக்கி பரபரப்பை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. இதை அதிமுகவினரே எதிர்பார்க்கவில்லை. அதேபோல சசிகலாவுக்கு நெருக்கமான அதிகாரிகளும் கூட தப்பவில்லை. அத்தனை பேரும் கூண்டோடு மாற்றப்பட்டனர்.

12வது நாளில் பரபரப்புப் பேச்சு
இந்த நீக்கத்திற்குப் பின்னர் 12 நாள் கழித்து அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் பிரமாண்டமாக கூட்டப்பட்டது. அதில் ஜெயலலிதா ஆற்றிய உரையில் அனல் பறந்தது.

தவறு செய்வோரில் 2 ரகம்
ஜெயலலிதா பேசுகையில், தவறு செய்வோர், துரோகம் செய்வோர் நீக்கப்படுகிறார்கள். இவர்களில் சிலர் அமைதியாக உள்ளனர். சிலரோ இன்னும் நாங்கள் செல்வாக்குடன்தான் உள்ளோம். விரைவில் மன்னிப்பு பெற்று வந்து விடுவோம். எங்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். பழிவாங்குவோம் என்று மிரட்டுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அவர்களை நம்பி செயல்படுகிறவர்களுக்கும் மன்னிப்பு கிடையாது என்று முழங்கினார் ஜெயலலிதா.

போன மச்சான் திரும்பி வந்தான்
இவர் இப்படி அதிரடியாக பேசிய அடுத்த சில நாட்களிலேயே சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் மன்னித்து கட்சிக்குள் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா. அதன் பின்னர்தான் சசிகலா குடும்பம் மேலும் பலமடைந்தது.

மீண்டும் விஸ்வரூபம்
அதிமுகவின் அதிகாரப்பூரவமற்ற அதிகார சக்தியாக விளங்கி வரும் சசிகலாவை தற்போது முறைப்படி கட்சியில் பதவி கொடுத்து அழகு பார்க்க ஜெயலலிதா முடிவெடுத்து விட்டதாக சொல்கிறார்கள்.

என்ன பதவி?
டிசம்பர் 31ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் சசிகலாவுக்கு முக்கியப் பொறுப்பை, அதாவது தனக்கு அடுத்த நிலையிலான பொறுப்பை ஜெயலலிதா அறிவிக்கப் போவதாக அதிமுகவினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.
என்ன நடக்கப் போகிறதோ?
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications