நில ஆர்ஜித சட்டத்தில் சில அம்சங்களுக்கு தமிழக அரசு திடீர் எதிர்ப்பு!
சென்னை: நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் தமிழக விவசாயிகள் எதிர்க்கும் சில அம்சங்களை நீக்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் அண்ணா திமுக, லோக்சபாவில் இந்த சட்டத்துக்கு ஆதரவு அளித்திருந்தது.
இந்நிலையில் இந்த சட்டத்தின் சில பிரிவுகளுக்கு திடீரென கடும் எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

மாநில சுயாட்சி...
அதில் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:
நிலச் சட்டத்தை பொருத்தவரை, தமிழக அரசு மாநில சுயாட்சி பாதிக்கப்படக் கூடாது என்பதிலும், விவசாயிகள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும் எப்போதுமே கவனமாக இருந்திருக்கிறது.

மாநில அரசுகளுடன்..
நிலச் சட்டத்ததில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோது இந்திய அரசானது அரசியல சாசன விதிமுறைகளை மீறி மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் அத்துமீறியிருக்கிறது என்பதை ஏற்கெனவே சுட்டிக் காட்டியிருக்கிறோம்.
மக்களுடன் அதிக நெருக்கத்தில் இருப்பது மாநில அரசுகளே. எனவேதான் நிலம் தொடர்பான விவகாரங்களை நிர்வகிக்கும் அதிகாரங்களை மாநில அரசிடமே அளித்து அரசியல் சாசனம் வழிவகை செய்திருக்கிறது.

ஏன் எதிர்ப்பு
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே ஆரம்பம் முதல் நிலச் சட்டம் தொடர்பான அனைத்து விவாதங்களிலும் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபட தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே தனியார் மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என ஆரம்பம் முதல் வலியுறுத்திவருகிறோம்.
இந்தக் கோரிக்கையை ஏற்பதாக இந்திய அரசு தெரிவித்தமையாலேயே எனது உத்தரவின்பேரில் கடந்த 10.3.2015 அன்று மக்களவையில் நிலச் சட்டத்தை அதிமுக ஆதரித்தது.

திருத்தத்தை கைவிடுக..
இருப்பினும், நிலச் சட்டத்தின் மூன்றாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில பரிந்துரைகளை தமிழக விவசாயிகள் கடுமையாக எதிர்க்கின்றனர். எனவே, தமிழக அரசு இந்தத் திருத்தத்தை எதிர்க்கிறது. எனவே குறிப்பிட்ட அந்தத் திருத்ததை மத்திய அரசு கைவிடும் என நம்புகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications