காய்கறிகள் விலை உயர்வு: சென்னையில் 50 தற்காலிக காய்கறி விற்பனை மையங்கள் துவக்க அரசு உத்தரவு
சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் கன மழையின் காரணமாக சென்னை நகருக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. மொத்த, சில்லறை விற்பனைக் கடைகளில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்தும் வகையில், சென்னை நகரில் 50 கூடுதல் காய்கறி விற்பனை மையங்களை தற்காலிகமாக திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை சென்னை மாநகரில் 42 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் திறக்கப்பட்டன. ஏழை. நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் இந்த காய்கறிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. கன மழையின் காரணமாக சென்னை நகருக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. மொத்த, சில்லறை விற்பனைக் கடைகளில் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் தற்காலிகமாக கூடுதலாக 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் துவங்க அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே, சென்னை மாநகரில், 92 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.

தற்காலிகமாக துவங்கப்படவுள்ள 50 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் விவரம் பின்வருமாறு:-
துரைப்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் டீயூசிஎஸ் அங்காடிகள், தாடண்டன் நகர், சாஸ்திரி நகர், விருகம்பாக்கம், சின்மயா நகர், திருநகர் (வடபழனி), மன்னார் முதலியார் தெரு (வடபழனி), பேரூர்- காரப்பாக்கம், கணேஷ் நகர் (கிழக்கு தாம்பரம்), கௌரிவாக்கம் (கிழக்கு தாம்பரம்), சந்தோஷபுரம் (கிழக்கு தாம்பரம்), இராமகிருஷ்ணன் தெரு (மேற்கு தாம்பரம்), வசந்தம் காலனி (வில்லிவாக்கம்), திருமங்கலம் (அண்ணாநகர் மேற்கு), ஏ.கே.சாமி நகர் (அயனாவரம்), பி.பி. கார்டன் (அமைந்தகரை), கிருஷ்ணாபுரம் (அம்பத்தூர்), புரசைவாக்கம், மணலி, எத்ராஜ்சாமி தெரு (எருக்கன்சேரி), முத்தமிழ் நகர் (கொடுங்கையூர்), பஜனைகோயில் தெரு (எர்ணாவூர்), பாரதியார் தெரு (எர்ணாவூர்), பழைய வண்ணாரப்பேட்டை, ராயபுரம், அருணாசலேஸ்வரர் தெரு (புது வண்ணாரப்பேட்டை), பூண்டி தங்கம்மாள் தெரு (புது வண்ணாரப்பேட்டை), தண்டையார் நகர், சௌகார்பேட்டை, தண்டையார் பேட்டை, கும்மாளம்மன் கோயில் தெரு (தண்டையார் பேட்டை), ஐசிஎப் பேருந்து நிலையம், சைதாப்பேட்டை, நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மேற்கு மாம்பலம், ரங்கைய்யா கார்டன் தெரு (மைலாப்பூர்), கிழக்கு அபிராமபுரம் (மைலாப்பூர்) ஆகிய இடங்களில் உள்ள கூட்டுறவு நியாய விலைக் கடைகள் மற்றும் அண்ணா நகர் மேற்கு, அசோக் நகர், ஆர்.கே.மடம் சாலை, இந்திரா நகர், ஆழ்வார்பேட்டை, தாம்பரம், கே.கே.நகர் மேற்கு, ராயப்பேட்டை, திருவான்மியூர், ஆற்காடு சாலை, போரூர் ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பல்பொருள் அங்காடிகள்.
பொது மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் காய்கறிகளான வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பீட்ரூட் மற்றும் புடலங்காய் ஆகிய காய்கறிகள் இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications