அதிமுக பொதுச் செயலாளராக மீண்டும் ஜெயலலிதா தேர்வு... !
சென்னை: அதிமுக பொதுச் செயலாளராக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
அதிமுகவின் புதிய மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் மாவட்ட செயலாளர்களுக்கு இணையான பதவிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது உயர் மட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா மீண்டும் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் அவைத் தலைவராக மதுசூதனன், பொருளாளராக ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர்களாக ஓ.பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக அமைப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் எஸ். பொன்னையன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைமை நிலையச் செயலாளராக பழனியப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
1989ம் ஆண்டு முதல்
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. அவருடைய மனைவி ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் இன்னொரு அணியுமாக அதிமுக பிளவுபட்டது. இருப்பினும் பின்னர் இரு பிரிவுகளும் இணைந்து கட்சி ஒன்று பட்டது. 1989ம் ஆண்டு இந்த இணைப்பு நடந்தது. ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதாக தேர்வு செய்யப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications