3வது அணி பற்றி இப்போது கூறுவதற்கு எதுவும் இல்லை: கொடநாட்டிலிருந்து திரும்பிய ஜெ. பேட்டி
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கொடநாடு சென்ற முதல்வர் ஜெயலலிதா இன்று பிற்பகல் சென்னை திரும்பினார். மத்தியில் யாருக்கு ஆதரவு என்பதை நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அறிவிப்பேன் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட அதிமுகவுக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா சூறாவளி பிரச்சாரம் செய்தார். இதையடுத்து தேர்தல் முடிந்த பிறகு கடந்த மாதம் 27ம் தேதி புறப்பட்டு நீலகிரி மாவட்டம் கொடநாட்டுக்கு சென்றார்.

கொடநாட்டில் ஓய்வு எடுத்த அவர் இன்று சென்னை திரும்புகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று கொடநாட்டில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பிய ஜெயலலிதா பிற்பகல் 2.38 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து அவர் விமானம் மூலம் சென்னைக்கு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு அவர் கார் மூலம் போயஸ் கார்டனுக்கு சென்றார்.
அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாளை மறுநாள் அதிமுகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் எனது கருத்துகளை தெரிவிக்கிறேன். 3வது அணி பற்றி இப்போது கூறுவதற்கு எதுவும் இல்லை. அனைவரையும் போல் நானும் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறேன் என்றார்
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications