ஜெ. 68: பச்சை குத்தி, 1500 கிலோ கேக் வெட்டி.. பட்டாசு வெடித்து அதிமுக கொண்டாட்டம்!
வேலூர்: முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு ஆற்காட்டில் நள்ளிரவில் 1,500 கிலோ எடையுள்ள கேக்கை அதிமுகவினர் வெட்டியுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை அதிமுகவினர் நள்ளிரவு 12 மணி முதல் கொண்டாடத் துவங்கிவிட்டனர். கோவில்களில் சிறப்பு பூஜை, கை, மார்பில் அம்மாவின் உருவத்தை பச்சை குத்துதல், கேக் வெட்டுதல் என்று அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஜமாய்த்து வருகின்றனர்.
Celebration at AIADMK HQ #Amma68 pic.twitter.com/78UMBCSP7U
— #Amma68 (@Hariadmk) February 24, 2016
இந்நிலையில் வேலூர் மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்தில் பிரமாண்ட மேடை அமைத்து அதில் 1,500 கிலோ கேக்கை அதிமுகவினர் வைத்தனர். நள்ளிரவு 12 மணி அடித்ததும் நடிகர் வையாபுரி முன்னிலையில் அதிமுகவினர் அந்த மெகா கேக்கை வெட்டினர்.
கேக்கை ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதே போன்று நெல்லை சந்திப்பு பழைய பேருந்து நிலையம் அருகேயும் நள்ளிரவு 12 மணிக்கு 68 கிலோ கேக்கை அதிகமுவினர் வெட்டினர். மேலும் கரூர், தூத்துக்குடியிலும் அதிமுகவினர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி 68 கிலோ கேக்குகளை வெட்டினர்.
Celebrations at AIADMK Headquarters in Chennai as CM Jayalalithaa turns 68 pic.twitter.com/uk2cfbdbGd
— ANI (@ANI_news) February 24, 2016
சேலத்தில் அதிமுகவினர் நள்ளிரவில் கேக் வெட்டியதுடன் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். மேலும் இடைவிடாமல் பட்டாசுகள், வானவேடிக்கைகள் வெடித்து ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடினர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications